மேஷ ராசிக்குள் செல்லும் சுக்கிரன் : பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள்
இந்து மத கலாசாரத்தில் நவகிரங்களை தெய்வமாக வழிபடும் முறை காணப்பட முக்கிய காரணம் கிரகங்களின் நிலையானது நமது வாழ்வில் நேரயாகவே தொடர்ப்பை கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் தான்.
கிரக நிலைகள்,பெயர்ச்சி மற்றும் முக்கிய கிரங்கள் இணைவதால் ஏற்படும் ராஜ யோகங்கள் என அனைத்துமே 12 ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், காதல் மற்றும் அழகின் கிரகமாக அறியப்படும் சுக்கிரன் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழ்வதால், ஒருவருடைய ராசியில் சுக்கிரன் சரியான இடத்தில் இருந்தால், அவர்களின் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சுக்கிரன் மார்ச் 26ஆம் திகதி மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். ஏப்ரல் 19 ஆம் திகதி வரை நிலைத்திருக்கு சுக்கிரன் மேஷ ராசியில் சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குவதால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசி சுக்கிரன் உருவாகும் சுக்க்ராதித்ய யோகமானது இவர்களின் வாழ்வில் மகத்தான நன்மைகளை பெற்றுத்தரப்போகின்றது.
இவர்களின் வாழ்வில் இதுவரைக்காலமும் இல்லாத அளவுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும். வெளிநாட்டுஉறவுகளிடமிருந்து பெரிய தொகை பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
நீண்ட நாட்களாகவே பேராடி வந்த விடயங்களுக்கு வெற்றிகரமாக முடிவு பெறப்படும். சுக்கிரன் ஆசியால் பணத்தட்டுப்பாடு மொத்தமாகவே நீங்ககும்.
தனுசு

ராசி தனுசு ராசிக்காரர்களுக்கு, சுக்கிர பெயர்ச்சியால் பல எதிர்பாராத வகையில் சாதக பலன்கள் வந்து சேரும்.
இவர்கள் அனுவித்த கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு பெரிய தொகை பணம் கைக்கு வரும் யோகம் காணப்படுகின்றது.
நீண்ட நாட்களாக திருமண வாழ்க்கையில் இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி சுக்கிரன் ஆசியால் தம்பதியினரிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட கால வழக்குகளில் வெற்றி கிட்டும்.
கும்பம்

கும்ப ராசியினர் வாழ்வில் இந்த சுக்கிரன் பெயர்ச்சியானது நிதி ரீதியில் உச்சகட்ட அதிரஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
இவர்களின் நீண்ட நாள் கடன் பிரச்சினைகள், தொழில் ரீதியில் இருந்து வந்த பிரச்சினைகள் என்பன நீங்கி மங்களகரமான நிலை உருவாகும். புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஆர்வம் அதிகரிக்கும்.
நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முதலீடுகள் மற்றும் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.