சோமவார விரதம் இருந்து தன் கணவனை உயிர் மீட்டெடுத்த சீமந்தனி
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமை அன்று விரதம் இருந்து சிவபெருமான் பார்வதியை வழிபடும் பொழுது தம்பதியினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.
அப்படியாக இப்படி விரதம் இருந்தால் நடக்கும் நன்மைகள் பலரும் சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர்.
உண்மையில் மனமுருகி செய்யும் இறைவழிபாட்டிற்கும் விரத்திற்கும் உண்மை பலன் கிடைக்கும். அதை பற்றி பார்ப்போம்.
முன்னோரு காலத்தில் சித்ரவர்மன் என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே மகள். அவள் பெயர் சீமந்தனி. அவள் மீது அதிக பாசம் வைத்திருந்தார் தந்தை.
சீமந்தனிக்கு திருமண வயது வரும்பொழுது ஜோதிடர்களை வரவழைத்து அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் மாப்பிள்ளை எப்படி அமைவார் என்ற கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஜாதகத்தை பார்த்த அவர்களில் ஒருவர் மன்னா உங்கள் மகள் அறிவிலும் அழகிலும் மிகச் சிறந்தவள் .எல்லோரும் போற்றும் படியான கணவனை அடைவாள்.
ஆனால் வந்த மற்றொரு ஜோதிடர் கவலையுடன் காணப்பட்டார். அவரின் கருத்தையும் கேட்க விரும்பினார் மன்னர்.
மன்னா! உங்கள் மகள் அனைத்திலும் சிறந்தவள்,ஆனால் உங்கள் மகள் திருமணமான சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழக்ககூடும் என்று அவர் கவலையுடன் கூறினார்.
இது கிரகத்தின் விதி என்றார் மன்னருக்கு அதிர்ச்சி மற்றும் கவலை வழிந்தோடியது.
மன்னராக இருந்தாலும் அவரும் தந்தை தானே. எந்த தந்தை தன் மகள் மாங்கல்ய பாக்கியம் இழக்க கூடும் என்று சொன்னால் தாங்கிக்கொள்ளமுடியும். இருப்பினும் காலம் கடந்தது அவள் மனப்பருவம் அடைந்தாள்.
பக்கத்து நாட்டு இளவரசர் சந்திரஹாசன் உடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
இருந்தாலும் ஜோதிடர் சொல்லிய வார்த்தைகள் மன்னர் மனதினை இன்னும் நீங்காமல் துன்புறுத்திக் கொண்டிருந்தது.
ஒருநாள் மன்னர் சந்திரஹாசன் ஆற்றுக்கு தன் நண்பர்களுடன் சென்று நீராட வீடு திரும்பவில்லை.
மன்னருக்கும், மன்னரின் மகள் சீமந்தனிக்கும் ஒரே அதிர்ச்சி. மிகவும் பதிவிரதையான அவள் தன் கணவன் திரும்பி வரவேண்டும் என்று பல வேண்டுதல்களை வைத்தார்.
மேலும் தன் கணவன் உறுதியாக திரும்பி வருவார் என்று நம்பிக்கையும் கொண்டார்.
பல நாட்கள் ஆகியும் கணவன் வராததால் சீமந்தனி தன் குல குருவின் மனைவியான மைத்ரேயிடம் சென்றால். விபரம் அறிந்த குரு பத்தினியாரும் நீ கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் விரதம் மேற்கொண்டு சிவன் பார்வதி வணங்கி வர உன் கணவன் கண்டிப்பாக திரும்பி வருவார் என்று சொல்ல ,அதன்படி அவளும் கார்த்திகைத் தோறும் திங்கட்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தாள்.
அப்படி நம்பிக்கையாக விரதம் இருக்க அவளது கணவனும் விரதம் முடிக்கும் நாளில் வீடு வந்து சேர்ந்தார். எத்தனை பெரிய ஆச்சரியம் .இங்கு தான் நம் நம்பிக்கையின் பலத்தை அறிந்துகொள்ளவேண்டும்.
வந்த கணவர் தான் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதையும், காட்டில் வசிப்பவர்களால் காப்பாற்றப்பட்டு ,பின்பு இவ்வளவு நாட்கள் அவர்கள் பாதுகாத்ததாக தெரிவித்தார்.
பின்பு மகிழிச்சி அடைந்த மன்னர் குடும்பம் அவர்களை வரவழைத்து பரிசு அளித்தார்கள் . அந்த சம்பவம் பின் சீமந்தனியம் சந்திரஹாசனும் மகிழ்ச்சியாக நீண்ட காலம் நன்றாக வாழ்ந்தனர்.
ஆதலால் ,ஜோதிடத்தில் எந்த ஒரு குறைகள் எந்த ஒரு தோஷங்கள் இருந்தாலும் அதற்கான விரதப் பலன் மற்றும் பரிகாரங்கள் கண்டிப்பாக உண்டு.
அதை நாம் செய்து வர தோஷங்கள் விலகி நம் வாழ்க்கை நிச்சயமாக சந்தோஷமான முறையில் அமையும் என்பதை நம்பிக்கையோடு ஏற்று கோவில்களுக்கு சென்று இறை வழிபாடு செய்ய வேண்டும்.