எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம்

By Sakthi Raj Oct 10, 2024 12:37 PM GMT
Report

வாரத்தில் ஒவ்வொரு நாளும் மிகவும் விஷேசமான நாள் மற்றும் கடவுள் வழிபாட்டுக்கு உரிய முக்கிய நாள்.அப்படியாக ஒவ்வொரு நாளும் நாம் எந்த கடவுளை வழிபட்டு விரதம் மேற்கொண்டால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.

திங்கள்

திங்கள் என்றாலே சிவபெருமானுக்கு உரிய நாள் என்று அனைவரும் அறிந்தது.அப்படியாக திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வேண்டி அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைத்து வாழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும்.

உங்கள் ராசியை காப்பாற்றும் காளி தேவி யார் தெரியுமா?

உங்கள் ராசியை காப்பாற்றும் காளி தேவி யார் தெரியுமா?


செவ்வாய்

செவ்வாய் கிழமை பொதுவாக அம்பாளுக்கு மற்றும் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.அப்படியாக அன்றைய தினத்தில் துர்க்கை, முருகன் மற்றும் அனுமனை வழிபாடு செய்ய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.மேலும் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், வாழ்வில் வளம் பெருகும்.அன்றைய தினத்தில் முருக பெருமானை நினைத்து கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் நவகோள்கள் மகிழ்ந்து நன்மையளிக்கும்.

எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம் | Viratha Natkal Palangal Parigarangal

புதன் 

புதன் கிழமை விநாயக பெருமானுக்கு உகந்த நாளாகும்.எனவே அன்றைய தினத்தில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாட்டு வந்தால் தடங்கல் ஏற்பட்ட காரியங்கள் எல்லாம் நடந்து வாழ்க்கை சிறக்கும்.

வியாழன்

வியாழன் கிழமை விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும். எனவே வியாழக்கிழமை அன்று தட்சணாமூர்த்தி மற்றும் இரண்டு தெய்வங்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது நல்ல மாற்றத்தை தரும்.

வெள்ளி

வெள்ளிக்கிழமை துர்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆகவே வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து துர்கை அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம் | Viratha Natkal Palangal Parigarangal

சனி

நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதோடு ஆஞ்சநேயர், பெருமாள், காளி தேவி ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. ஆகையால் சனிக்கிழமை அன்று சனிபகவானையும் மற்ற தெய்வங்களையும் வழிபடுவது சிறந்தது.

ஞாயிறு

நவகிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு ஞாயிறு என்று மற்றொரு பெயரும் உண்டு. ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் வழக்கை பிரகாசமாக இருக்கும்.எதிரிகள் தொல்லையில் இருந்து நம்மை காப்பாற்ற பஇந்த சூரிய பகவான் வழிபடு நன்மையை தரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US