விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இறை வழிபாட்டின் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று விரதம். சிலர் உணவு உண்ணாமலும், இன்னும் சிலர் பழங்கள் மட்டும் உண்டும் விரதம் இருப்பார்கள்.
இன்னும் சிலர் முழு நாளும் உபவாசமாக இருந்து, தண்ணீர் கூட குடிக்காமலும் விரதம் இருப்பார்கள்.
எப்படி விரதம் இருந்தாலும் நமக்கு ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது என சொல்லப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து விரதம் இருப்பதால் நமக்கு வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து விரதம் இருந்து வழிபடுவதால் மனம் தூய்மை அடைகிறது. நம்முடைய உடல் மற்றும் மனத்தை மட்டுமின்றி நம்முடைய மனதிற்குள்ளும், நம்மை சுற்றியும் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் சுத்தப்படுகிறது. மனம் ஒரு நிலை அடைகிறது.
விரதம் இருப்பதால் மனம் தெளிவடைகிறது. மனநிலையில் இருக்கும் குழப்பங்கள், தடுமாற்றங்கள் அகன்று, உள்ளுணர்வை விழிப்படைய செய்கிறது.
உடலில் உள்ள ஆற்றல்களை புதுப்பிக்க விரதம் மிகவும் உதவுகிறது. இது உயிர் செல்களை ஊக்குவித்து, உடல் செல்களை புதுப்பிக்க செய்கிறது.
விரதம் இருக்கும் காலங்களில் உடல் சுகங்களை மறப்பதால் புலன்களை கட்டுப்படுத்தும் திறன் கிடைக்கும். இதனால் பிரபஞ்ச சக்தியுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் பிறக்கிறது.
விரதம் இருப்பதால் உள்ளுணர்வு சக்தி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அறியவில் ரீதியாக உடலும், மனமும் அமைதி பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் குறைவதால், நச்சுக்கள் சுத்தப்படுத்தப்படுகிறது. * உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்குபவர்களுக்கு இது விரைவான பலனை தரும்.
தியானத்தை பயிற்சி செய்பவர்களுக்கு மனம் ஒரு நிலைபடுவதற்கு விரதம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி பெருகி, ரத்தம் சுத்தப்படுத்தப்படுவதால் பலவிதமான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
விரதம் இருப்பதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது என்பதால் சிறு வயது குழந்தைகளுக்கும் உடல் வளர்ச்சி ஏற்பட சிறப்பானதாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |