84 நாட்களில் வக்ர பெயர்ச்சி அடையும் வியாழன்-விபரீத யோகம் பெரும் 5 ராசிகள் யார்?
ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டில், வியாழன் மொத்தம் 84 நாட்களுக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார். அவ்வாறு வியாழன் வக்கிர பெயர்ச்சி அடையும் காலத்தில் 12 ராசிகளுக்கும் ஒருவிதமான தாக்கம் உண்டாகும்.அதில் சில ராசிகளுக்கு நேர்மறையாகவும் சில ராசிகளுக்கு எதிர்மறை விளைவுகளும் ஏற்படுத்தும்.
பொதுவாக வியாழன் கிரகங்களில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறார். அவர் தற்போது ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து இருக்கிறார்.இந்த வக்கிர பெயர்ச்சியானது சில ராசிகளுக்கு ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி.அப்படியாக எந்த ராசியினர் விபரீத யோகமும் மாற்றமும் பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
வியாழனின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு நிதி நிலையில் நல்ல மாற்றம் உண்டாக்கும்.புதிய வீடு மற்றும் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.வியாபாரத்தில் அதிக லாபம் அடைவீர்கள்.உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும்.நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த வியாழனின் வக்ர பெயர்ச்சி இவர்களுக்கு முதலில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.உங்களுடைய பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல முறையில் வருமானம் பெற்று தரும்.அலுவலகம் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இந்த வியாழனின் வக்ர பெயர்ச்சி செல்வ செழிப்பை கொடுக்கும்.மனதில் அமைதி நிலவும்.உடல் ஆரோக்கியம் சீராகும்.வெளிநாட்டு பயணம் நல்ல ஆதாயம் கொடுக்கும்.உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள்.
மகரம்:
வியாழன் மகர ராசியினருக்கு தொழில் முன்னேற்றத்தையும் அங்கீகாரத்தையும் கொடுப்பார்.பதிவு உயர்வு புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும்.பணம் சேமிப்பில் அக்கறை செலுத்துவீர்கள்.மாணவர்கள் போட்டி தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மீனம்:
மீன ராசிக்கு வியாழனின் இந்த வக்ர பெயர்ச்சி ஆன்மீகத்தில் முழு ஈடுபாட்டை கொண்டு செல்லும்.குடும்பத்தில் செல்வ வளமும் சந்தோஷமும் நிலவும்.திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே நல்ல பந்தம் உருவாகும்.உடலிலும் மனதில் வலிமை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |