மறந்தும் இந்த 3 இடங்களில் மட்டும் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்
நம் எல்லோருக்கும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். அந்த வகையில் ஒரு சில இடங்களில் மட்டும் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்கிறார்கள். அங்கு நின்று நாம் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொழுது எதிர்மறை ஆற்றலால் சூழப்படுவதாக சொல்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
கோவில்களில் கருவறை:
கோவில்களில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அங்கு தான் மூலவர் சிலை அமைக்க பெற்று சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆதலால் இந்த இடங்களில் தெய்வீக சக்தி அதிகம் இருப்பதை நாம் காணலாம். அதனால் இங்கு சென்று நாம் முழு மனதோடு கவனச் சிதறுகள் இல்லாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
அதை மீறி புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினால் நம் மனம் திசை தடுமாற்றம் அடைந்து நம்முடைய ஆன்மீக சக்தியில் சில பாதிப்புகள் உண்டாக்கிறது. மேலும் அவை புனிதத்தை குறைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால் மறந்தும் கோவில் கருவறையில் புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள்.
மயானம்:
மனிதன் உயிர் வாழ்ந்து அவன் உறங்கும் இடமான சவக்கிடங்குகள் அல்லது மயானம் ஆகிய இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். இதை ஆன்மீக பார்வையிலும் தவறு என்று சொல்கிறார்கள். இந்த இடம் மரணத்தின் தொடர்புடையது என்பதால் இங்கு நின்று நாம் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொழுது துரதிஷ்டத்தை நாம் பெற்று வாழ்க்கையில் சில எதிர்மறை சக்தியால் சூழப்படலாம் என்கிறார்கள்.
இவ்வாறு இந்த இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொழுது அவை நம்முடைய ஆன்மீக சக்திகளையும் சமநிலையையும் கூட பாதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் இந்து மதத்தில் உடல் எரியூட்டப்படும் இடங்களை புகைப்படம் எடுப்பது ஒரு ஆன்மாவை மரியாதை குறைவாகவும் ஆன்மாவின் பயணத்திற்கு இடையூறாக அமைவதுமாக கருதப்படுகிறது.
கோபுரங்கள்:
பொதுவாக நிறைய பேர் கோவில் கோபுரங்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் விரும்புவார்கள். ஆனால் கோபுரங்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை பெற்றது. அதனால் தான் கோவில்களில் மசூதிகள் தேவாலயங்கள் போன்றவற்றில் கோபுரங்கள் உயரமாகவும் கூம்பு வடிவிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் நம்முடைய நேர்மறை சக்திகளை அவை உறிஞ்சி விடக் கூடிய தன்மைகள் பெற்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







