சாணக்கிய நீதி:மனிதன் வெற்றி பெற கடைபிடிக்க வேண்டிய 8 ரகசியங்கள்
மனிதனாக பிறந்தால் அவனுக்கான இலக்கை அடைந்து வெற்றி பெறவேண்டும்.அப்பொழுது தான் அவனுக்கு வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பும் பிரியமும் உண்டாகும்.அதற்காக,அந்த இலக்கு மிக பெரியதாக இருக்கவேண்டும் என்று இல்லை.
அவன் யார் என்பதை புரிந்துகொள்ள அவனுக்காக அவன் வைத்துக்கொள்ளும் ஒரு சிறிய போட்டி அவ்வளவுதான்.அப்படியாக சாணக்கிய நீதி படி மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற அவன் கடைபிடிக்க வேண்டிய 8 ரகசியங்களை பற்றி பார்ப்போம்.
1.திடீர் என்று ஒருவன் கெட்ட காலத்தை நெருங்கும் பொழுது அவனை அறியாமல் அவன் மிகுந்த அச்சம் கொள்வான்.அந்த நேரத்தில் அவனுடைய நம்பிக்கையை முற்றுலுமாக இழந்து காணப்படுகிறான்.உண்மையில் ஒரு மனிதனுக்கு பயம் தான் முதல் எதிரி.ஆனால் எவன் ஒருவன் வரும் எதிர்ப்புகள்,துன்பத்தை நிதானமாக கையாண்டு கடக்கின்றானோ அப்பொழுதே அவன் வெற்றிக்கான பாதிப்படியை கடந்து விடுகின்றான்.
2.தொழில் மற்றும் வேலையில் உங்களுக்கு சாதகம் இல்லாமல் போகும் பொழுது அவர்களுடைய கடினமான கடந்த காலங்களை கடந்து வெற்றி பெற்றதை மறந்து விடுகிறார்கள்.அந்த நேரத்தில் தான் நாம் நம்மை முழுமையாக நம்பி முயற்சியில் இறங்க வேண்டும்.
3.அதே போல் கோபத்தில் தொழிலும் குடும்ப வாழ்க்கையில் அவசரமாக முடிவு எடுக்காதீர்கள்.அது தோல்வியில் முடியும்.
4.தொழில் வாழ்க்கையில் வியாபாரம் எல்லாம் எளிமையாக செல்லும் பொழுது இன்னும் கவனமாக கையாளுங்கள்.அடுத்த கட்டம் நோக்கி ஆலோசனை செய்யுங்கள்.நேரத்தை வீண் அடிக்காதீர்கள்.
5.நாம் எப்பொழுதும் சேமிப்பு என்பதை தொடர வேண்டும்.சேமிப்பு ஒருவருடைய மிக பெரிய கடின காலங்களில் உதவியாக அமையும்.
6.எத்தனை பெரிய பிரச்சனை எதிர்ப்புகள் வந்தாலும்,உங்கள் இலக்கில் மிக கவனமாக இருங்கள்.நோக்கம் கவனம் சிதறாமல் இருந்தாலே பாதி வெற்றி கிடைக்கும்.
7.நீங்கள் நினைத்த இலக்கை அடைந்தாலும் கற்பதை நிறுத்தாதீர்கள்.புதிய அனுபவம்,புதிய நபர்கள் சந்திக்கும் பொழுது அவர்களிடம் இருந்து கற்று கொள்ளும் விஷயம் நம் வாழ்க்கையில் உதவியாக இருக்கும்.
8.நாம் எப்பொழுதும் நம்முடைய நட்பு வட்டாரத்தை மிக கவனமாக தேர்ந்து எடுக்கவேண்டும்.நாம் இணையும் நபர்கள் பொறுத்து தான் நம்முடைய எண்ண அலைகளும் வெற்றியும் மாறுபடுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |