சோழிகளை வீட்டில் வைத்திருந்தால் நல்லதா? கெட்டதா? வாஸ்து சொல்லும் தகவல்
பொதுவாக சிலர் வீடுகளில் சோழிகளை வைத்திருப்பார்கள்.
இந்த சோழிகளில் மொத்தமாக 130 வகை இருப்பதாக நூல்கள் கூறுகின்றன. இதில் ஏதாவது ஒரு வகை வீட்டில் இருந்தாலும் அது வீட்டிற்கு நன்மை தரும் என கூறப்படுகின்றது.
இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து நாம் பதிவில் பார்ப்போம்.
சோழிகள் வீட்டில் வைப்பது நல்லதா?
பொதுவாக சோழிகள் பிரசன்னம் பார்ப்பதற்காகவும், விளையாடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எல்லா வகையான சோழிகளையும் வீட்டில் வைக்கலாம்.
வீட்டில் ஏதாவது தோஷங்கள் இருப்பின் அவற்றை இல்லாமாக்கும் சக்தி சோழிகளுக்கு உள்ளது. ஏனென்றால் கடலில் இருந்து எடுக்கப்படும் எந்த பொருளும் மகாலட்சுமிக்கு இணையானது என கூறுவார்கள்.
மேலும், வீட்டில் நிம்மதி, சந்தோசம் நிலைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் சோழிகளை வைத்து ஒரு பரிகாரம் செய்யலாம். இந்த பரிகாரத்தின் வெளிபாடாக வீட்டில் சந்தோஷம் பெருகும்.
பரிகாரம்
ஒரு கண்ணாடி பவுல் எடுத்து அதில் பாதியளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
அதில், 5 சாதாரணமான வெள்ளை சோழிகள், 1 கருப்பு சோழி எடுத்து முதலில் 3 வெள்ளை சோழிகளை நிமிர்த்தியவாறு தண்ணீருக்குள் போட வேண்டும்.
கடைசியாக 1 கறுப்பு சோழி, 2 வெள்ளை சோழிகளை கவிழ்த்து தண்ணீருக்குள் போட்டு விட வேண்டும். பார்க்கும் போது 3 சோழிகள் கவிழ்ந்தும் 3 சோழிகள் நிமிர்ந்தும் இருக்க வேண்டும்.
பின்னர் 1 கறுப்பு சோழி, 2 வெள்ளை சோழிகளை கவிழ்த்து தண்ணீருக்குள் போட்டு விட வேண்டும். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது 3 சோழிகள் கவிழ்ந்து இருக்க வேண்டும். 3 சோழிகள் நிமிர்ந்து இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
சோழி பரிகாரத்தில் சோழிகள் காட்சிப்படுத்தும் விதம் வாஸ்து குறிப்புகளில் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.