நீங்கள் பிறந்த தேதி இதுவா? பகவத் கீதையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை?
மனிதன் என்ற இனம் இந்த உலகில் இருக்கும் வரை பகவத் கீதை அவர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும். அப்படியாக நம்முடைய எண் கணிதம் கொண்டு பகவத் கீதையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
எண் 1:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது கடந்த காலம் என்பது ஒரு பாடம். அதை தெரிந்து கொண்டு நிகழ்காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்பதை அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எண் 2:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் கடினமான காலங்களிலும் சந்தோஷமான காலங்களிலும் அவர்கள் நம்பிக்கையோடு அந்த நாட்களை கடந்து செல்வதற்கு அவர்கள் பழக வேண்டும். அப்பொழுது தான் அவர்களுடைய மன நிலையில் ஒரு நல்ல தெளிவு பிறக்கும்.

எண் 3:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் நம்பிக்கை என்னும் தாரக மந்திரத்தை அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையால் எதையும் மாற்ற முடியும் சாதிக்க முடியும் என்று தீர்க்கமாக நம்புவதால் மட்டுமே அவர்களால் வாழ்க்கையில் நினைத்ததை அடையலாம்.
எண் 4:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் மன குழப்பத்துடன் அல்லாமல் தாங்கள் செய்வது சரியான செயல்தான் என்று நம்பிக்கை கொண்டு அதை தெளிவாக செய்து விட நிச்சயம் அவர்களுக்கான பதிலும் வெற்றியும் கிடைக்கும்.
எண் 5:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் உலகத்தில் ஒருவரை உயர்த்தக்கூடிய முக்கியமான விஷயம் ஞானம் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். அந்த ஞானத்தை அவர்கள் வளர்த்துக் கொள்வதில் அவர்கள் அதிக ஈடுபாடு செலுத்த வேண்டும். அந்த ஞானத்தை அவர்கள் வளர்த்துக் கொள்ளும் பொழுது அவர்கள் தனிநபராகவும் சமுதாய வாழ்க்கையிலும் வெற்றி அடைவார்கள்.

எண் 6:
இந்த உலகத்தில் எல்லாமே மாறுதலுக்கு உரியது. அதாவது நம்முடைய உடலாக இருக்கட்டும் நம்மை சுற்றி உள்ளவர்களாக இருக்கட்டும் உணர்வுகளாக இருக்கட்டும் எல்லாம் நொடிக்கு நொடி மாறுதல் உடையது. ஆக அந்த மாறுதலை ஏற்று நாம் அதற்கு தகுந்தாற்போர் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
எண் 7:
இந்த உலகத்தில் ஒருவருக்கு கடமையை செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அந்த கடமைக்கான பிரதிபலன் இறைவனுடையது. அந்த பதிலானது எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆக கடமையை செய்வதில் நம்முடைய எண்ணம் சரியாக இருக்க வேண்டும்.
எண் 8:
இந்த உலகத்தில் எப்பொழுதுமே யாராலும் எவராலும் எதிர்காலத்தில் நடக்க கூடியதை கணிக்க முடியாது. அதனால் தான் இன்றைய பொழுது அவர்கள் விழிப்புணர்வோடு மகிழ்ச்சியாகவும் அந்த தினத்தை சரியாக பயன்படுத்துவது அவசியமாக இருக்கிறது.
எண் 9:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தர்ம காரியங்கள் செய்வதில் குழப்பம் அடையக் கூடாது. இந்த உலகத்திற்கான நியதி என்று ஒன்று உள்ளது. அதை அடைவதற்காக நாம் நம்முடைய போராட்டத்தை தொடர்வதில் எந்த தவறும் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |