இரவு நேரங்களில் நாய் அழுதால் என்ன நடக்கும் தெரியுமா?

By Sakthi Raj Oct 14, 2026 10:52 AM GMT
Report

வள்ளலார் நாம் அறிந்திருப்போம். அதாவது ராமலிங்க அடிகளார் என்பவர் " வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நான் வாடினேன்" என்று பாடியவர். அப்படியாக, வள்ளலார் ஒரு இடத்தில் பயந்து இருக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.

சன்மார்க்கத்தில் பயத்திற்கு இடமில்லை என்றாலும் ஒரு உயிர் துன்பப்படுகின்ற பொழுது அடிகளார் அதனை கண்டு மிகுந்த வருத்தமும் பயமும் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

காக்கை கூவுதல், பருந்தின் குரல், ஆந்தையின் அலறல் அல்லது நாயின் இரவு நேர அழுகைகள் போன்ற நிகழ்வுகளைக் கேட்கும் பொழுது ஏதோ ஒரு உயிருக்கு துன்பம் நேர போகிறது என்று அவர் மனதளவில் மிகவும் கலங்கி உடல் நடுங்கி வருந்துகிறார்.

நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன? உங்களுடைய குணாதிசயம் பற்றி தெரியுமா?

நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன? உங்களுடைய குணாதிசயம் பற்றி தெரியுமா?

வள்ளலார் அவருக்கு மண்ணோ பொண்ணோ மீதான ஆசைகள் இல்லை என்றாலும் சக உயிர் கஷ்டப்படுகின்ற பொழுது அல்லது அது குறித்த சகுனங்களை அவர் தெரிந்து கொள்கின்ற பொழுது அவர் மனம் பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்திருக்கிறார்.

இவ்வளவு அற்புதம் குணம் கொண்ட வள்ளலாரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. மேலும், வள்ளலார் குறித்து நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் காஞ்சிபுரம் செந்தில்குமார் அவர்கள். அதை பற்றி பார்ப்போம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US