கடக ராசியின் கர்மபலன் என்ன ? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஜோதிடத்தில் சந்திரனுடைய ஆதிக்கத்தை பெற்ற கடக ராசியினர் எப்பொழுதும் ஒருவர் மீது அதிக அளவில் அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். அதே சமயம் இவர்கள் அதிக அளவில் உணர்ச்சிவசக் கூடியவர்கள். அப்படியாக, கடக ராசிக்காரர்களின் கர்மபலன் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
கடக ராசியை பொறுத்த வரை ஆன்மீகத்தில் அதிக அளவு ஈடுபாடு இருக்கும். இருப்பினும் இவர்களும் ஆன்மீகம் தொடர்பாக ஏதாவது வாக்குறுதிகளை கொடுத்தால் அதை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்.
தடை ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும் அதை முடிப்பது நன்மையை தரும். மேலும், இவர்களுக்கு திருமண வாழ்க்கை என்ற எடுத்துக் கொள்ளும் பொழுது ஏழாம் அதிபதியான சனி மற்றும் 11ம் அதிபதியான சுக்கிரனின் ஆதிக்கத்தால் திருமண வாழ்க்கையில் சில சிக்கலை சந்திக்கலாம். குறிப்பாக, ஆண்களுக்கு மனைவியால் மகிழ்ச்சி இன்மை, கருத்து வேறுபாடுகள் பிரிவு போன்றவை ஏற்படலாம்.

கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் முடிந்தவரை கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது இவர்கள். சொந்தமாக ஒரு விஷயத்தில் இறங்கும் போது தான் முழு பலன் பெறுகிறார்கள். மேலும் இவர்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் அதை வளர்பிறை காலங்களில் செய்வது வெற்றியை கொடுக்கும். இவர்கள் வாழ்க்கை 25 வரை போராட்டங்கள் ஆக இருந்தாலும் அதன் பிறகு ஒரு நல்ல மாற்றத்தை பெறும்.
இவர்களுடைய ரகசியங்களை இவர்கள் வெளிப்படையாக பேசுவதை தவிர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், கடக ராசியினர் அவர்களுடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய கர்ம பலனிலிருந்து விடுபட இவர்கள் சிலர் பரிகாரம் செய்யலாம். பெண்களாக இருந்தால் கணவனை இழந்த பெண்ணிற்கு உதவி செய்யலாம்.
ஸ்ரீரங்கம், மாங்காடு, காமாட்சி அம்மன் அல்லது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் போன்ற சுக்கிர தலங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பை பெற்றுக் கொடுக்கும். மேலும், கடக ராசியினருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த காணொளியில் பார்க்க தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |