மனிதனுடைய உண்மையான சொத்து எது?
மனிதனுக்கு சமயங்களில் உண்மையை ஏற்று கொள்ள மனம் சங்கடப்படும்.அப்படியாக ஒரு பெரும் செல்வந்தர் அவரை பார்க்க வந்த வயதான துறவியை அவருடன் கூட்டி சென்று அவருக்குரிய நிலம்,வயல்,வீடு தோப்புகள் என்று எல்லாவற்றையும் இது என்னுடையது சுவாமி என்று பெருமை பேசினார். அதற்கு துறவி இல்லையே சிறிது நாட்கள் முன் வேறுறொவருடைய நிலம் என்றாரே என்றார்.
அதை கேட்ட செல்வந்தர் மிகுந்த கோபம் கொண்டார்.உடனே துறவி அதாவது அதை ஒரு 50 வருடம் முன் வேறொருவர் சொன்னார் என்றார்.அதற்கு செல்வந்தர் ஆம்,அது என் தாத்தாவாக இருக்கும்.நாங்கள் நீண்ட வருடங்களாக இந்த நிலத்தை யாருக்கும் விறக்கவே இல்லை என்றார்.
அதையும் விடாது துறவி,சரி சுமார் 25 வருடம் முன்பு இன்னொருவர் இது என்னுடைய நிலம் என்றாரே என்று சொல்ல,அதற்கு அந்த செல்வந்தர் அது என் அப்பா தான் சுவாமி என்றார். அப்படியா!இப்பொழுது இந்த நிலம் என்னுடையது என்று சொன்ன அந்த இருவரும் எங்கே?என்று கேட்டார் துறவி.
அதற்கு அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்டபங்களைக் காட்டி, “அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்” என்றான் அந்தச் செல்வந்தன். உடனே துறவி சிரித்தபடியே நிலம் இவர்களுக்கு சொந்தமா அல்லது நிலத்திற்கு இவர்கள் சொந்தமா என்றார்.
என்னுடைய நிலம்,என்னுடைய மனை என்று மார்தட்டியவர்கள் இப்பொழுது இருந்த இடம் காணாமல் சென்றுவிட்டனர்.அவர்கள் மார்தட்டிய நிலம் மட்டும் அப்படியே இருக்கின்றது.அதை பெருமை கொண்டாட இன்னும் அடுத்த தலைமுறையினர் வருவார்கள்.இவ்வாறு மாறி கொண்டே இருக்கும்.
ஆக மனிதர்கள் பூமிக்கு வரும் சுற்றுலா பயணிகள்.எது இருந்தாலும் இல்லை என்றாலும் காலம் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.நடப்பவை நடந்து கொண்டு இருக்கும்.இதில் எவன் ஒருவன் இறைவனை மனதார சரண் அடைந்து பற்றி கொள்கிறானோ அவன் எதற்கும் அஞ்சுவதில்லை.புயலும் அவனை அசைத்திட முடிவதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |