சாபம் என்றால் என்ன? தோஷம் என்றால் என்ன?
இந்த உலகத்தில் பல விஷயங்கள் விடையற்றதாகவே இருக்கிறது. அதில் ஒன்று சாபம் மற்றும் தோஷம். மேலும், இந்த சாபம் ஆனது எவ்வாறு நடக்கிறது? இந்த தோஷம் எவ்வாறு உருவாகிறது என்று பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். அந்த வகையில் சாபம் என்றால் என்ன? தோஷம் என்றால் என்ன? இதற்கான வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்வோம்
தோஷம் என்றால் நாம் ஏதோ ஒரு காரியத்தை தவறு என்று தெரிந்தும் அந்த நேரத்தில் அறியாமல் செய்து விடுகிறோம் என்றால் அதனால் உண்டாகக் கூடியது தோஷம். இந்த தோஷம் என்பது சமயங்களில் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது.
அதாவது மனம் உருகி மன்னிப்பு கேட்டும் பிரார்த்தனை செய்தும் அதற்கான பரிகாரங்கள் செய்யும் போது தோஷமானது அதனுடைய தாக்கத்தை நம் வாழ்க்கையில் குறைப்பதை நாம் பார்க்க முடியும். ஆனால் சாபம் என்பது இதற்கு அனைத்திலும் மாறாக செயல்பட கூடியது.
அதாவது ஒருவர் மற்றொருவருக்கு தீங்கும் இழைக்கும் பொழுது, வலி பொறுக்காமல் அந்த வலியை வெளிப்படுத்த முடியாமல் அவர்களின் வார்த்தையால் ஒருவரை சபிப்பதின் பெயர்தான் சாபம். இந்த சாபமானது மிகப்கொடியது மேலும் ஒருவருக்கு சாபம் ஏற்பட்டு இருக்கின்றது என்றால் அதை அவ்வளவு எளிதாக போக்கிக் கொள்ள முடியாது.
இந்த சாபம் எதிர் தரப்பினர் எவ்வளவு வலியுடன் வேதனையின் உச்சத்தில் சபித்திருக்கிறார்களோ அந்த வலியின் உச்சக்கட்டமும் வேகமும் அடங்கும் வரைசாபம் ஆனது ஒருவரை பாதிக்கும். இதற்கு தீர்வு உண்டா என்று கேட்டால் அதற்கான தீர்வு காலம் மட்டுமே.
அதனால் காலத்தினால் சில தவறான செயல்பாடுகள் செய்யும் நிலை உண்டானாலும் நாம் பிறர் மனதை புண் படுத்தாமல் வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







