ஜாதகத்தில் லக்னத்தில் சனி பகவான் இருந்தால் அந்த நபர் எப்படிப்பட்டவராக இருப்பார் ?
ஜோதிடத்தில் கர்மகாரகன் என்று அழைக்க கூடிய சனி பகவான் நீதி, நேர்மை நியாயம் என்று செயல்பட கூடியவர்.
அந்த வகையில், லக்னத்தில் சனி பகவான் இருக்கிறார் என்றால் அல்லது லக்னத்தை சனி பகவான் பார்க்க பிறந்த அந்த ஜாதகர் சற்று சுயநல சிந்தனை கொண்டவராக இருப்பார்.
அதேபோல், கொஞ்சம் சோம்பேறியாகவும் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜாதகர் பழமையான விஷயங்களை தேடி விரும்பக் கூடிய ஒரு நபராகவும் இருப்பார்.
இவருக்கு அதிக அளவில் சற்று பொறாமை குணங்கள் இருக்கும். ஜாதகர் கடின உழைப்பாளியாகவும், உழைப்பால் உயரக்கூடியவராகவும் இருப்பார்.

இவருக்கு பிடிவாதம் சற்று அதிகமாக இருக்கும். இவருக்கு அடிக்கடி ஞாபகம் மறதி வரலாம். இவர் பெரும்பாலும் தங்களுடைய முயற்சியாலே வெற்றி பெறக்கூடிய நபராகவும் இருப்பார்.
இந்த ஜாதகருக்கு பொது வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்கும். யாராவது இவரை ஏதேனும் சொல்லிவிட்டால் அந்த நபரை பழி வாங்குவதிலும் இவர்கள் வல்லவராக இருப்பார்.
இவருக்கு கொஞ்சம் சந்தேக குணம் அதிகமாக இருக்கும். எதையும் வெளிப்படையாக பேசாத நபராகவும் இருப்பார்.
இவருக்கு சற்று தாழ்வு மனப்பான்மையும் அதிகம் இருக்கும். ஆனால், ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கும் உண்டு. இருந்தாலும் சனி பகவானுக்கு சுப பார்வை சேர்க்கை இருந்தால் பலன் மாறுபடுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |