நீங்கள் பிறந்த தேதி இதுவா? நீங்கள் என்ன விரதம் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்?
எண் கணிதத்தின்படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கிறது. அப்படியாக, எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்ன விரதம் மேற்கொண்டால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதை பற்றி பார்ப்போம்.
1. எண் 1 (பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28):
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சூரிய பகவான் இருக்கிறார். ஆக, இவர்கள் ஏகாதசி விரதம் மேற்கொண்டால் இவர்களுக்கு சூரிய பகவானின் ஆற்றல் அதிகரிப்பதோடு கடந்த கால கர்ம வினைகளும் நீங்கி சிறந்த பலன் கிடைக்கும்.
2. எண் 2 (பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29):
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சந்திர பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமை விரதம் மேற்கொள்ளலாம். இவ்வாறு இவர்கள் விரதம் இருக்கும் பொழுது உணர்ச்சிகளை சீராக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. மனநிலையில் நல்ல தெளிவும் குழப்பமும் விலகுகிறது.

3. எண் 3 (பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30):
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக வியாழபகவான் இருக்கிறார். ஆக, இவர்கள் வியாழக்கிழமை விஷ்ணு பகவானை வழிபாடு செய்து விரதம் மேற்கொண்டால் திருமண தடைகள் நீங்கும். நல்ல வாழ்க்கை துணை அமைந்து சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
4. எண் 4 (பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31):
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக ராகு பகவான் இருக்கிறார். ஆக, இவர்கள் கால அஷ்டமி விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். அதாவது காலபைரவரை இவர்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வரும் பொழுது தீய தாக்கங்களின் ஆற்றல் குறைந்து மன குழப்பம் விலகி தெளிவாக சிந்திக்க கூடிய திறன் பிறக்கும்.
5. எண் 5 (பிறந்த தேதிகள்: 5, 14, 23):
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். ஆக, இவர்கள் சதுர்த்தி விரதம் மேற்கொண்டால் இவர்களுக்கு வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
6. எண் 6 (பிறந்த தேதிகள்: 6, 15, 24):
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். இவர்கள் வைபவ லட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை அன்று மேற்கொண்டால் இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும், வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

7. எண் 7 (பிறந்த தேதிகள்: 7, 16, 25):
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக கேது பகவான் இருக்கிறார். இவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டால் இவர்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். விநாயகரின் அருளை பெற்று மிக உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.
8. எண் 8 (பிறந்த தேதிகள்: 8, 17, 26):
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சனிபகவான் இருக்கிறார். இவர்கள் துர்காஷ்டமி விரதம் மேற்கொண்டு துர்க்கை அம்மன் வழிபாடு செய்யும் பொழுது மனதில் தைரியமும் வலிமை அதிகரித்து எதிரிகளின் தொல்லை நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுகிறார்கள்.
9. எண் 9 (பிறந்த தேதிகள்: 9, 18, 27):
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபாடு செய்து விரதம் இருக்கின்ற பொழுது இவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் குடும்ப வாழ்க்கையும் நேர்மறை எண்ணங்களும் பெறுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |