தீபம் ஏற்றுவதற்கும்,கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்?
இறைவன் வழிபாட்டில் மிக முக்கிய பங்காக தீபம் ஏற்றுவதும் கற்பூரம் காண்பிப்பதும் இடம் பெரும்.இவை எல்லாம் எந்த ஒரு பூஜையும் நிறைவேறாது.அப்படியாக நாம் வழிபாடு செய்யும் பொழுது தீபம் ஏற்றுவதற்கு கற்பூரம் காண்பிப்பதற்கும் உள்ள வித்யாசம் பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் 16,32,64 விதம் என்று வேறுபாடுகள் உண்டு. ஆனால் அனைத்து விதமான பூஜைகளிலும் (நெய்) தீபம் காண்பிப்பதும், கற்பூரம் காண்பிப்பதும் கட்டாயம் இடம்பெறுவதை நாம் பார்க்க முடியும்.
இறைவனுக்கு அலங்காரம் செய்த பிறகு ஊதுபத்தி என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல். அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம் செய்த பிறகு வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம் செய்வோம்.
இறுதியாக தான் பக்தர்களுக்கு இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும், கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம் செய்யப்படும். அவ்வாறு காண்பிக்கும் இவை இரண்டிற்கும் இரண்டு வேறுபாடுகளும் பலன்களும் உள்ளது.
ஒரு மனிதனின் உண்டாகும் துன்பமும் கஷ்டமும் விலக அவன் தீபம் ஏற்ற ஏற்ற அந்த தீப ஒளி போல் அவன் வாழ்க்கையும் பிரகாசம் அடையும்.மேலும் கற்பூரம் காண்பிப்பதால் மனிதனின் மனம் ஒருமுகம் அடைகிறது.
அவன் மனதில் உண்டான அழுக்குகள் விலகி இறைவனுடன் மனம் ஒன்றிவிடும். மேலும்,கற்பூரம் காண்பிக்கும்போது, அந்தக் கற்பூரம் சிறிது சிறிதாக உருகிக் கரையும்.இறுதியில் கற்பூரம் தடம் தெரியாமல் எரிந்து கரைந்து விடும்.
அதே போல் தான் மனிதர்கள் நாமும் கற்பூரம் போல் கரைந்து கடவுளிடம் இணைய வேண்டும்.மனம் கரைய கரைய நம்மில் உள்ள "நாம்" என்ற அகங்காரம் உடைந்து போட்டி பொறாமை எல்லாம் விலகி வாழ,இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும். இந்தத் தத்துவத்தை உணர்த்தவே இறைவனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |