பாவங்களில் மிக பெரிய பாவம் எது?
உலகத்தில் மனிதர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பாவம் புண்ணியம் கணக்கு நாம் தடுக்கமுடியாது ஒன்று.நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப அவை நம்மை வந்து அடையும்.பாவங்களில் பல வகை உள்ளது.
அதிலும் சமயத்தில் நம்முடைய செயல் சொல் பாவத்தை விளைவிக்கும் என்று அறியாமல் சிலர் சில பாவங்களை செய்கின்றனர்.அதை பற்றி பார்ப்போம்.
அதாவது ஒருவரை துன்புறுத்துவது,மனம் வேதனை அடையச்செய்வது போன்ற விஷயங்கள் மட்டுமே பாவம் என்ற கணக்கு ஆகாது.அதை விட பெரிய பாவம் சிறு வயதில் யாரேனும் ஆன்மீகத்தில் ஈடுபாட்டோடு இருந்தால் அவர்களிடம் ஏன் இந்த சிறுவயதில் இந்த ஆன்மீக சிந்தனை.
இவ்வளவு சிறு வயதில் இது தேவை இல்லாதது.ஆன்மீகத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று சொல்வது தான். அவ்வாறு செய்வது அவர்கள் ஒருவருக்கு செய்யும் மிக பெரிய துரோகமாக கருதப்படுகிறது.இங்கு ஆன்மீகத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்றாலும் நாமாக சென்று அவை அடைய முடியாது.
கடவுளின் அழைப்பு வேண்டும்."அவன் அருளால் அவன் தாள் வணங்கி"இது தான் உண்மை.சாதாரணமாக எல்லோராலும் எல்லா கோயில்களுக்கும் சென்று விடமுடியும்.அங்கு காட்சி கொடுக்கும் இறைவனை காண முடியும்.
ஆனால் அவன் அருள் இருந்தால் மட்டுமே அவனை உணர முடியும்.அவன் தரிசனம் பெற முடியும் அது வரை அவன் பார்ப்பது வெறும் சிலையாகத்தான் இருக்கும்.ஆக ஒருவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு செலுத்துகிறார்கள் என்றால் அவர்களை அவர்களின் பயணத்தில் பயணிக்க விடுவது தான் சிறந்தது.
முடிந்தால் ஒரு நல்ல குருவை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.நல்ல வழிகாட்டியாக அவர்களுக்கு இருக்கலாம். மேலும்,எம்பருமான் ஈசன் அவனை உணர்ந்தவர்கள் அவர்களுக்கு சிறிது விபூதி எடுத்து பூசினால் மனம் நிறைவாகாது.
மனதார எல்லாம் மாயை,ஒரு பிடி சாம்பலும் கரைந்து போகும் என்று தெளிந்தவர்கள் கைகள் நிறைய விபூதி எடுத்து நெற்றி நிறைய "ஓம் நமசிவாய" என்று சொல்லி பூசிக்கொள்வதே அவர்களுக்கு மன நிறைவை கொடுக்கும்.
ஆனால் சிலர் அதையும் விமர்சனம் செய்வார்கள்.எதற்கு இந்த பட்டை.பார்ப்பதற்கே அசிங்கமாக உள்ளது என்று அவர்களை வேறு பார்வையில் பார்ப்பார்கள்.அவன் அருள் இல்லை என்றால் எவனாலும் கை நிறைய விபூதி அள்ளிக்கொண்டு நெற்றியில் பூசிக்கொள்ள முடியாது.
அதற்கு தைரியமும் வராது.ஆக இவ்வாறு மனதில் நினைப்பதும் அவர்களிடம் செய்யாதே என்று சொல்வதும் மிக பெரிய பாவம்.
இனி எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் ருத்ராச்சம் அணிந்தாலோ நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டாலோ மனதில் ஓம் நமசிவாய என்று சொல்லி விலகி விடுங்கள்.மீதி எல்லாம் அவன் பார்த்து கொள்வான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |