சிவன் கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?
நொடி பொழுதில் எதுவேண்டுமானாலும் மாறலாம். அது தான் உலகம். இது தான் நிலையானது அழியாதது என்று யாராலும் எதையும் தீர்மானித்து சொல்லமுடியாது.
அதாவது நிரந்தரமற்ற வாழ்க்கையில் தான் நாம் தினமும் ஓடி கொண்டு இருக்கின்றோம்.இப்படி வாழ்க்கையில் நாம் எதை நோக்கி செல்வது.எதை அடைவது?என்ற குழப்பம் இருக்கும் அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக மனிதனுக்கு எதையும் மார்தட்டி கொள்ளும் பழக்கம் உண்டு.மேலும் அங்கு இருந்து தான் மனிதன் தவறு செய்யவும் தொடங்குகிறான்.உலகில் வாழும் அனைத்து உயிர்களும் உடல் யாது உருவம் யாது?என தெரிந்து வரவில்லை.
நம்முடைய ஆன்மா அது புது உடலை தேர்ந்து எடுத்து வந்து இருக்கிறது.அதற்கான வழியை கடவுள் கொடுத்திருக்கிறார்.அது என்று வேண்டுமாலும் மறைந்து போலாம்.
ஆக ஒருவரை உடலாக உருவமாக பார்க்காமல் ஆன்மாவாக பார்க்க தொடங்கினாலே நம்மிடம் உள்ள கர்மா குறைய தொடங்கும்.
மேலும் சிவபெருமான் நினைத்தால் ஓர் உயிரை ஆட்கொள்வர்.நினைத்தால் அவரை விட்டு விலகி விடுவார்.
அதற்காக ஈசனுக்கு அவர்களை பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. ஒரு மனிதனை ஈசன் ஆட்கொள்கிறார் என்றார் அவர்கள் ஆன்மா உலகின் உச்சகட்ட அனந்த நிலையில் நனைந்து கொண்டு இருக்கும்.
இறை அருளில் தழைத்து உலகின் உண்மை நிலை அவர்களை தழுவி கொண்டு இருக்கும்.இது ஒருவகையான சந்தோசம்.அவர்களை ஈசன் வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம்.
அப்படியாக திடீர் என்று ஓர் நாள் அவர்களால் ஈசனை முன் போல உணரமுடியவில்லை என்றால்,அவர்கள் ஈசனை மறக்கவில்லை.ஈசன் தான் அவர்களை விட்டு விலகி சென்று கொண்டு இருக்கிறார் என்று பொருள்.
அவர்களால் என்ன செய்ய முடியும்?குழந்தையை தத்து எடுத்து வளர்த்த ஈசன் உலகின் அனைத்து ஆனந்த நிலையை அறிமுக படுத்திய ஈசன் விட்டு சென்று விட்டார்.
ஆனால் உண்மையில் அங்கு தான் ஈசனின் பாடம் தொடங்குகிறது.அதாவது நொடி பொழுதில் எதுவேண்டுமானாலும் மாறும்,நீ எதுவாக இருக்கப்போகிறாய்.அதை நீ உணரவேண்டும் என்று உணர்த்த ஈசன் சற்று விலகி செல்வார்.
நான் உன்னுடன் இருக்கிறேன் அதனால் என்னை உருகி வணங்குகிறாய்.
நான் இல்லை என்றால் என்ன செய்யப்போகிறாய்.நான் கற்று கொடுத்த பாடம் மறந்து எந்த வாழ்க்கையை தேர்ந்து எடுக்கப்போகிறாய் என்று ஈசன் தனித்து விடுவார்.அப்பொழுது அந்த நொடி உணரவேண்டும்.
"நாம்"என்ற மனம் ஒரு நிலையாக இருக்க வேண்டும்.சுற்றி மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கும்.அது எதுவாக வேண்டுமாலும் இருக்கலாம்.
ஆன்மா இருக்கும் உடல் மாறும்,ஆதலால் "தான்"என்பது "நான்"என்ற உள் இருக்கும் ஆன்மா அதை சரியான நிலையில் வைத்துக்கொண்டு வருவதை எதிர்கொண்டு நகரும் வாழ்க்கை மாறும் சூழ்நிலை என்று மனம் தேற்றி ஓம் நமச்சிவாய என்று மனதார சொல்லி அவனை நினைத்து அவன் வழியில் செல்ல உலகம் புதுமை ஆகும்.
யாரும் அசைக்க முடியத ஆன்மாவாக நம் ஆன்மா உருவெடுத்து நிற்கும் அதுவே நம்முடைய உண்மை நிலை.எப்பிறவியிலும் மாறாத நிலை.
எல்லாம் இறைவனுக்கே சொந்தம். கிடைத்த ஆன்மாவை மேம்ப்படுத்துவோம்.அழியாத உயர்நிலை அடைவோம்.
ஓம் நமச்சிவாய
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |