தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்-இதன் உண்மை பொருள் தெரியுமா?
உலக்தில் எப்பேர்ப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்தாலும் போகும் உயிரை மீண்டும் உயிர்ப்பிக்க இன்னும் ஒரு விஞ்ஞானம் பிறக்கவில்லை.இங்கு தான் நாம் அனைவரையும் நமக்கும் மேல் ஒருவன் இருக்கின்றான் என்ற தவிர்க்க முடியாது உண்மையை உணர செய்கிறது.
அப்படியாக,கட்வுள் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து,நீ என்ன விதைக்கிறாயோ அதற்கு ஏற்ற பலனையும் பெறுவாய் என்ற வரமும் கொடுத்து அனுப்புகிறார். இதில் மனிதன் ஆடாத ஆட்டமும் இல்லை,அவன் ஆடிய ஆட்டத்தை இறைவன் அடக்காமல் போனதும் இல்லை.
ஆக,போதுமான வரையில் இந்த மனித வாழ்வில் "தான்" என்ற கர்வம் விடுத்து,தீய செயல்கள் சொற்கள் தவிர்த்து,இன்னும் எத்தனை பிறவி கொடுத்தாலும்,நான் மனதார செய்த தானத்தையும் தர்மத்தையும் ஒன்றும் செய்யமுடியாது என்று வாழ வேண்டும்.வரும் மரணத்திற்கு தைரியமாக நம்முடைய புன்னகையை கொடுக்க வேண்டும்.
அவ்வாறு வாழ மனதில் எந்த ஒரு அழுக்கும்,பாரமும்,பிறரை கெடுத்த உணர்வும்,பிறரை கஷ்டப்படுத்திய குற்றஉணர்ச்சியும் இல்லாமல் இருக்க வேண்டும்.
இதை எல்லாம் உணர்த்தும் வகையில் தான் ஒரு நல்ல பழமொழி சொல்வார்கள்.அதாவது தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் என்று.ஆனால்.இவை காலப்போக்கில் தன்னிடம் உள்ள பொருட்களில் நம் பயன் பாட்டிற்கு போகத்தான் பிறருக்கு உதவவேண்டும் என்று பேச்சு வழக்கில் கொண்டு வந்துவிட்டார்கள்.
உண்மையில்,இதன் பொருள் அறிந்தால் எல்லாரும் ஞானி ஆகிவிடலாம்.அதாவது மனிதன் எவ்வளவு ஆசையாக ஓடி உழைத்து சம்பாதித்தாலும்,பொருள் சேர்த்தாலும் சொத்துக்கள் குவித்தாலும் அவன் காலம் முடிந்து போகும் பொழுது எதுவும் அவனை வழியனுப்ப வருவதில்லை.
உடல் மறைந்து,ஆன்மா மறு உருவம் எடுத்தாலும் எஞ்சியிருக்கும் அவன் சம்பாதித்த தானமும் தர்மமும் தான் அவன் உடன் நின்று உதவி செய்யும்.எத்தனை சாதுரியமானாக வேண்டுமானாலும் இருங்கள்.எத்தனை வலிமை படைத்தவனாக வேண்டுமானாலும் இருங்கள்.
அவன் கொடுத்த உயிர் இது.ஒரு நொடி பொழுது போதும் அவனுக்கு சுற்றும் உலகத்தை நிறுத்தி மாற்றம் நிகழ்த்த.இன்று நீ ஏளனமாக நினைப்பவர்களுக்கு நாளை நீ மரியாதை செலுத்தும் நிலை வரலாம்.இன்று நீ வியந்து பார்த்தவர் நாளை வீழ்ந்து போகலாம்.காலம் மாறலாம்.காட்சிகள் மாறலாம்.
ஆனால் நாம் செய்யும் தானமும் தர்மமும் மாறுவதில்லை.நமக்காக நம்முடன் கஷ்ட காலங்களில் உடன் நின்று வாதாடப்போகும் ஒரே சாட்சி நாம் செய்யும் தானமும் தர்மமும் தான்.ஆக,வாழ்வோம் பிறரை புண்படுத்தாமல்,உதவி செய்து மகிழ்வோம்.
ஓம் நமச்சிவாய!!!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |