எந்த ராசியினர் ருத்ராட்சம் அணியலாம்? அணியக்கூடாது?
சிவபெருமானின் அம்சமாக போற்றக்கூடிய ருத்ராட்சத்தில் பல வகைகள் இருக்கிறது. அதாவது ஐந்து கோடுகளிலிருந்து, ஆறு கோடுகள் கொண்ட ருத்ராட்சம் என மொத்தம் 1 முதல் 21 ருத்ராட்ச வகைகள் இருக்கிறது. இந்த 21 ருத்ராட்சத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்புக்கள் உள்ளது. அந்த வகையில் 12 ராசிக்காரர்கள் எந்த ருத்ராட்சம் அணியலாம்? அணியக்கூடாது என்று பார்ப்போம்.

மேஷம்:
இவர்கள் ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் அணியும் பொழுது இவர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை எடுத்து காரியங்களில் வெற்றி கிடைக்கிறது. மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணியும் பொழுது இவர்களுக்கு மங்களகரமான நிலை உண்டாகிறது.
ரிஷபம்:
இவர்கள் 4,6 மற்றும் 14 முகம் ருத்ராட்சம் அணிவது சிறந்த பலன்களை கொடுக்கும். இதனால் அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும். குழப்பங்களில் விடுபட்டு மன அமைதியை பெறுகிறார்கள்.
கடகம்:
கடக ராசியினர் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணியும் பொழுது மிகச்சிறந்த பலன்களை பெறுகிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் சந்தித்த தடைகள் விலகி எதிலும் சிறப்பாக செயல்படக்கூடிய திறன் கிடைக்கிறது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் ஒன்று மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணியும் பொழுது இவர்களுக்கு மங்களகரமான பலன்களை பெறுகிறார்கள். இதனால் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரித்து ஞானமும் கல்வியில் சிறந்த விளங்கக்கூடிய பாக்கியமும் கிடைக்கிறது.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் 4, 6 அல்லது 14 முகம் கொண்ட ருத்ராட்சம் அணியும்பொழுது சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கிறது. இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் பொழுது இவர்களுக்கு வெற்றி தன் வசமாகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |