எந்த கிழமையில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட நபராக இருப்பார்கள் தெரியுமா?

By Sakthi Raj Jul 30, 2026 11:28 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதேபோல் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகமும் அதிபதியாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, நாம் எந்த கிழமையில் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

1. திங்கட்கிழமை:

இந்த தினத்தில் பிறப்பவர் மிகுந்த அழகாகவும் திறமையுடனும் இருப்பார்கள். இவர்கள் ஊர் போற்றும் வகையில் வாழக்கூடியவராக இருப்பார்கள்.

2. செவ்வாய்க்கிழமை:

இவர்கள் வீரமாகவும் வலிமையாகவும் தடைகளைக் கடந்து போராடி வெல்லக்கூடிய அமைப்பையும் பெற்றிருப்பார்கள்.

எந்த கிழமையில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட நபராக இருப்பார்கள் தெரியுமா? | Whats Your Birth Day Says About Your Personality

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

3. புதன்கிழமை:

நல்ல ஆற்றலுடனும் புகழுடனும் திகழ்வார்கள். பேச்சில் ஒரு வசீகரத்தன்மை காணப்படும்.

4. வியாழக்கிழமை:

இவர்கள் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். வெளிநாடு சென்று வேலை பார்த்தால் இவர்கள் கை நிறைய சம்பளம் வாங்கும் அமைப்பு உண்டாகும்.

5.வெள்ளிக்கிழமை:

இவர்களுக்கு இறை பக்தியும் பிறருக்கு உதவக்கூடிய பண்பும் அதிகமாக இருந்தாலும் பிடிவாத குணம் சற்று அதிகமாக இருக்கும்.

எந்த கிழமையில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட நபராக இருப்பார்கள் தெரியுமா? | Whats Your Birth Day Says About Your Personality 

மற்றவர்கள் காலில் இந்த ராசிகள் கட்டாயம் விழக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?

மற்றவர்கள் காலில் இந்த ராசிகள் கட்டாயம் விழக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?

6. சனிக்கிழமை:

இவர்கள் கடின உழைப்பாளியாகவும் சமுதாயத்தில் பலம் படைத்தவர்களாகவும் இவர்கள் காணப்படுகிறார்கள்.

7. ஞாயிற்றுக்கிழமை:

இவர்கள் அறிவும் அழகும் சேர்ந்து இருக்கக்கூடியவர்கள் என்றாலும் சற்று சோம்பேறித்தனம் இவர்களிடம் அதிகம் இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US