2025 அனுமன் ஜெயந்தி எப்பொழுது? அன்று செய்யவேண்டிய முக்கிய வழிபாடு
2025 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 12 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் அனுமனை நினைத்து வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும். அப்படியாக அன்றைய தினம் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
1. அனுமன் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு ஆகும். ஆக, அனுமன் ஜெயந்தி அன்று அனுமன் சாலிசா, சுந்தர காண்டம் அல்லது அனுமன் கவசத்தைப் பாராயணம் செய்வது நம்முடைய பயத்தையும், நம்மை சுற்றி உள்ள எதிர்மறை சக்திகளையும் விலக செய்கிறது.
2. மேலும், அன்றைய தினம் அனுமன் ஆலயம் சென்று அவருக்கு துளசி அல்லது வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையாக அமையும்.
3. அனுமன் மிக பெரிய சிவ பக்தர். அனுமனை, சிவ பெருமானின் ருத்ர அவதாரம் என்றும் சொல்லுவதுண்டு. எனவே சிவனை வழிபட்டு அனுமனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
4.ராமர் இருக்கும் இடமெல்லாம் அனுமன் இருப்பார் என்பார்கள். அதனால் அன்றைய தினம் ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதி வழிபாடு செய்வது நமக்கு எதிரிகள் தொல்லையை விலக செய்கிறது.
5. அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை நினைத்து தானம் செய்வதால் நமக்கு உண்டான கிரக தோஷங்கள் விலகுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |