உங்கள் ராசி இதுவா? உங்களுக்கு இந்த வயதில் தான் திருமணம் நடக்குமாம்
ஒரு மனிதனுக்கு கல்வி, வேலை பணம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வாழ்க்கை துணையும் மிகவும் அவசியம். தனியாக நீண்ட நாட்களுக்கு வாழ்க்கையை கழித்து விட முடியாது. மேலும், ஒரு துணையோடு நாம் சேர்ந்து ஒரு வாழ்க்கை தொடங்கும் பொழுது நாம் நிறைய விஷயங்களை கற்றுத் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு பக்குவம் நமக்கு கிடைக்கிறது.
ஆனால், இந்த திருமணம் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் நடந்து விடுவதில்லை. சிலருக்கு காலதாமதமான திருமணம் அல்லது படிப்பு முடித்து உடனே திருமணம் போன்ற நிகழ்வுகள் நடப்பதை நாம் பார்க்க முடிகிறது.
அப்படியாக 12 ராசிகளுக்கும் எந்த வயதில் திருமணம் செய்தால் நல்ல பலன் என்று என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினர் ஒரு சுதந்திர பறவைகள். அதனால் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக தனியாக நண்பர்களுடன் குடும்பங்களுடன் நேரம் செலவழித்த பிறகு இவர்கள் திருமணம் என்கின்ற ஒரு பந்தயத்திற்குள் செல்ல விரும்புவார்கள். அதனால் இவர்களுக்கு 28 வயதிற்கு மேல் திருமணம் செய்தால் நல்லது என்று தோன்றும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் 30 வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். காரணம் இவர்கள் தொழில் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தங்களை தயார் செய்த பிறகு தங்களுக்கு திருமணம் என்று எண்ணக்கூடியவர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினர் 30 வயதில் கடந்தே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் திருமணம் செய்யக்கூடிய நபருடன் நல்ல புரிதல் ஏற்பட்ட பிறகு அவர்களை வாழ்க்கை துணையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு இவர்கள் காலதாமதம் கொள்கிறார்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு 25 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் வரும். இவர்கள் எப்பொழுதும் குடும்பத்தை சார்ந்திருப்பார்கள். ஆதலால் தங்களுடைய குடும்பத்திற்கு ஏற்ற துணையை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.
சிம்மம்;
சிம்ம ராசியினர் அவர்களுடைய தொழில் லட்சியத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் வைத்திருப்பார்கள். ஆதலால் இவர்களுக்கு திருமணம் செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்று விரும்பக் குறிப்பிட்டார்.
கன்னி:
கன்னி ராசியினர் ஒரு திருமணம் பந்தத்தில் நுழைவதற்கு முன் தங்களை தொழில் ரீதியாக நன்றாக வளர்ந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் வைத்திருப்பார்கள். ஆதலால் இவர்கள் 28 வயதிற்கு மேல் திருமணம் செய்யலாம் என்ற ஒரு எண்ணம் வரும்.

துலாம்:
துலாம் ராசியினர் அவர்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் சற்று சிரமத்தை சந்திக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் திருமணம் நடந்த பிறகு அவர்களுடைய தொழில் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் சமநிலையாக கொண்டு போவதற்கும் தயாராகிறார்கள். ஆக இவர்கள் 25 வயதிற்கு மேல் திருமணம் நடந்தால் நல்லது என்று நினைக்கக் கூடியவர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் யாரையும் அவ்வளவு எளிதாக நம்பி விட மாட்டார்கள். அதனால் இவர்களுக்கு காதல் அல்லது திருமணம் என்று வரும் பொழுது துணையை புரிந்து கொள்வதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆக திருமணத்திற்கு வயது ஒரு தடையில்லை முதலில் புரிதலே முக்கியம் என்று எண்ணக் கூடியவர்கள்.
தனுசு:
தனுசு ராசியினர் சுதந்திரமாக இருக்கக்கூடியவர்கள். நிறைய விஷயங்களை தேடி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். அதனால் அவர்கள் ஒரு நல்ல புரிதலும் தங்கள் ஒரு நல்ல பக்குவ நிலைக்கு வந்த பிறகும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று 30 வயது கடந்து திருமணம் செய்ய விரும்புவார்கள்.
மகரம்:
மகர ராசியினர் திருமண பந்தத்தில் ஒரு நல்ல புரிதலும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதலால் இவர்களுக்கு ஏற்ற துணை வரும் வரை இவர்கள் திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள்.
கும்பம்:
கும்ப ராசி பொருத்தவரை இவர்கள் தொழில் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால் இவர்கள் தொழில் ரீதியாக எப்பொழுது திருப்தி அடைகிறார்களோ அப்பொழுது தான் இவர்கள் திருமணம் செய்ய தயாராகிறார்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு அவர்களை காட்டிலும் அவர்கள் குடும்பத்துடன் இணைந்து போகக்கூடிய வாழ்க்கை துணையை தான் இவர்கள் அதிகம் விரும்புவார்கள். இவர்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நபர் என்பதால் குடும்ப கடமைகளை முடித்த பிறகே திருமணம் செய்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |