மனிதன் எப்பொழுது மனிதனாகலாம்
உலகில் எத்தனை பிறப்புகள் இருந்தாலும் மனித பிறப்பு தான் மிக உயர்ந்தது.ஆனால் அவன் வாழும் குறுகிய காலகட்டத்தில் அவன் தான் எல்லாமும் என்ற எண்ணம் அவனை பல சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்பத்திற்கு ஆளாக்கிறது.
அதனால் தான் ஞானிகளும்,யோகிகளும் மனிதன் அவனுடைய இருளில் இருந்து வெளிவர பல போதனைகள் செய்தார்கள்.காரணம் அவன் இறக்கும் முன் பிறவி பலன் அறிந்து மோட்சம் பெற வேண்டும் என்பதற் தான்.இருந்தாலும் ஆசை யாரை விட்டது.
மனிதன் வாழ்நாளில் அவனுடைய ஆசையால் மட்டுமே பல துன்பத்திற்கு ஆளாகின்றான்.உலகம் நிலையற்றது என்பதை எத்தனை சம்பங்கள் வழியாக அவன் பார்த்தாலும் மனம் பக்குவ படுவதில்லை.எதிர் வினை தெரிந்தும் பாவம் செய்ய துணிகின்றான்.
இதை தாம் செய்யாமல் வாழவே ஞானிகள் நித்தம் இறைவனை நாடி சென்றனர்.அதாவது தான் பாவம் செய்யமாட்டேன்,அற்ப மனிதனாக ஒரு பொழுதும் ஆசைக்கொண்டு பாவ கடலில் விழும் முன் என்னை தடுத்து ஆள்கொள் இறைவனே என்று அவன் கால்களை பற்றி கொண்டனர்.
அப்படியாக வாழ்க்கையின் உண்மையை அறிந்த பட்டினத்தார் பாடிய இந்த பாடலை ஒரு முறை படித்தாலே நாம் பல உண்மையை உணரலாம்.கண்முடித்தனமாக செய்யும் பாவங்களில் இருந்து நாம் விடுதலை பெற்று மனிதனாகலாம்.
விறகினை மூடி அழல் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஒருபிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே .
—பட்டினத்தார் .
பொருள்:
விறகை அடுக்கி மூடி மறைத்துத் தீயை மூட்ட வெந்து பிணம் விழுந்து நொறுங்கும்.கொழுப்பு உருகி எலும்பு கறுத்து அடங்கும்.ஒரு கைப்பிடி அளவு சாம்பல் ஆகாத உடலை நிலையானது என்று நினைக்கும் என்னை,ஆட்கொள் இறைவன் என்பது தான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |