முடி வெட்டும் பொழுது செய்யும் இந்த ஒரு தவறு.. வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும்
நம்முடைய சாஸ்திரங்களில் ஒவ்வொரு விஷயமும் செய்வதற்கு பின்னால் ஒரு காரணம் காரியம் இருக்கிறது. அதாவது ஒரு சில விஷயங்களை ஒரு சில நாட்களில் செய்யலாம் என்றும் அவ்வாறு செய்யும் பொழுது அதிர்ஷ்டத்தை நமக்கு கொடுக்கும் என்றும் ஒரு சில காரியங்களை தவறியும் ஒரு சில நாட்களில் செய்யக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்கள். அப்படியாக, எந்த தினங்களில் முடி வெட்டலாம்? கூடாது என்று பார்ப்போம்.

முடி வெட்ட உகந்த தினங்கள்:
ஒருவர் முடி வெட்டுவதற்கு உகந்த நாளாக திங்கள்கிழமை இருக்கிறது. இந்த நாட்களில் சென்று நாம் முடியை வெட்டும் பொழுது நம்முடைய மன அழுத்தங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி ஒரு நன்மை உண்டாகும். அதேபோல் புதன் கிழமை புதன் பகவானுக்கு உரிய நாள். ஆக இந்த நாளில் நாம் முடி வெட்டும் பொழுது தடைகள் விலகும், மனரீதியாக தெளிவும் உண்டாகும்.
நீங்கள் இந்த நாட்களில் முடி வெட்டும் பொழுது உங்களுடைய முடி சம்பந்தமான பிரச்சனை விலகும். வெள்ளிக்கிழமையை ஆளக்கூடிய கிரகமாக சுக்கிரன் இருக்கிறார். இந்த தினங்களில் நீங்கள் முடி வெட்டுவது நிச்சயம் உங்கள் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும்.

அதை விட ஒரு நல்ல தொடக்கமாகவும் அமையும். சனிக்கிழமைகளில் முடி வெட்டும் பொழுது அவர்களுக்கு சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லாம் விலகுகிறது. சனிக்கிழமை ஆளக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார்.
ஆக, சனிக்கிழமைகளில் முடி வெட்டும் பொழுது முற்றிலுமாக எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் விலகுகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முடி வெட்டும் பொழுது நம்முடைய குழப்பங்கள் எல்லாம் விலகும். அன்றைய தினம் முடி வெட்டும் பொழுது நிச்சயம் நமக்கு மனரீதியான ஒரு தெளிவு பிறக்கும் என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |