12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் எப்பொழுது நன்மை நடக்கும் தெரியுமா?

By Sakthi Raj Mar 25, 2026 08:47 AM GMT
Report

ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதை நாம் காணலாம். அப்படியாக 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்ட காலம் எப்பொழுது வரும் என்று பார்ப்போம்.

12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் எப்பொழுது நன்மை நடக்கும் தெரியுமா? | When Will 12 Zodiac Get Luck In Life

மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?

மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் என்பது அவர்கள் திருமணம் முடிந்தவுடன் வரக்கூடியதாக இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு இவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இவர்கள் படிப்பு முடிந்ததும் சமுதாயத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை பெறுகிறார்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் வேலை கிடைத்தவுடன் மிகப்பெரிய அளவில் முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் பெறுகிறார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகு ஒரு உயரத்தை அடைகிறார்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத நட்புகளை குறைக்கும் பொழுது இவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு எல்லா விஷயங்களும் தாமதமாக கிடைத்தாலும் கட்டாயம் வந்து சேர கூடியதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் ஆறு மாதம் ஒருமுறை நிறம் மாறும் அதிசய விநாயகர்.. எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் ஆறு மாதம் ஒருமுறை நிறம் மாறும் அதிசய விநாயகர்.. எங்கு தெரியுமா?

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இவர்கள் வாழ்க்கையில் உண்மையான காதலை சந்தித்த பிறகு அவர்களுக்கு மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வருகிறது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நெருங்கிய நபர்களின் துரோகத்தை சந்தித்த பிறகு வாழ்க்கையில் உயரத்தை அடைகிறார்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை அல்லது படிப்பிற்காக வெளியூர் செல்ல நேரும்பொழுது இவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை துணையை சந்தித்த பிறகு இவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வருகிறது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு தவறான நட்புகளை கைவிடுவதால் இவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு இவர்கள் மிகப்பெரிய அளவில் ஒரு உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய யோகம் கிடைக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US