ஆன்மீகம்: ஒரு மனிதனுக்கு எப்பொழுது முழு சுதந்திரம் கிடைக்கும்?
மனிதர்களுடைய முதல் எதிரியாக அவர்களே சமயங்களில் இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்குள் இருக்கின்ற பயம், பதட்டம், கவலை இவை எல்லாம் தான் அவர்களுடைய வாழ்க்கை வாழாமல் பல நேரங்களில் தடுத்துக் விடுகிறது.
அப்படியாக மனிதன் எப்பொழுது கவலை இல்லாமலும், எந்த ஒரு கஷ்டங்கள் இல்லாமலும் மகிழ்ச்சியாக சுந்தந்திரமாக வாழலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் எல்லா அத்தியாயங்களிலும் ஒரு மனிதன் பற்றின்மையோடு கடமையை செய்து வாழ்தல் மட்டுமே அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது மேலும் அதுவே தர்மம் என்று சொல்லுகிறார்.

கிருஷ்ணன் பகவான் நமக்கு சொல்லும் அந்த வழிகாட்டுதலில் தான் இந்த உலகமே அடங்கியிருக்கிறது. அதாவது ஒரு மனிதன் எப்பொழுதும் எதன் மீதும் பற்று வைக்காமல், எதிர்பார்ப்பு இல்லாமல் கடமையைச் செய்கிறானோ அவனுக்கு எந்த காலத்திலும் துன்பமில்லை.
அதேபோல் ஒரு மனிதன் எப்பொழுதும் தலை நிமிர்ந்து மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றால் குடும்பத்திலும், தொழிலிலும், சமுதாயத்திலும் செய்யவேண்டிய கடமையை தவறாமல் செய்தல் அவசியம் ஆகும்.

தனக்கான கடமையை செய்தவர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. கடவுளே தன் முன் வந்து நின்றாலும், அவர்கள் தலை நிமிர்ந்து பேசுவதற்கான ஒரு தைரியத்தை அவை கொடுக்கிறது. ஆனால் பலருக்கும் காலம் கடந்தே இந்த ஞானம் கிடைக்கிறது.
அவ்வாறு நீங்கள் கடமையைச் செய்ய தவறியவராக இருந்தாலும், இன்றைய நொடிப் பொழுதில் இருந்தாவது நீங்கள் உங்களுடைய கடமையை செய்து பலனை எதிர்பாராமல் வாழ தொடங்கும் பொழுது உங்களுக்கு துன்பம் என்கின்ற சிறையில் இருந்து சுதந்தரமான ஒரு விடுதலை கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |