குரு இடமாற்றம்.., பணமழையில் நனைய போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்
குருபகவான் இடமாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உள்ளிட்டவைகளை பெறப்போகின்றனர்.
செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக குருபகவான் விளங்குகிறார். இவர், தேவர்களின் குருவாகவும், தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை குருபகவான் மாற்றி வருகிறார்.
தற்போது, மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மே மாதம் 1 -ம் திகதியில் இருந்து குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்து, 2025 மே மாதம் வரை பயணிப்பதால் இந்த அதிர்ஷ்டம் பிற ராசிகளுக்கும் கிடைக்க போகிறது.
ரிஷப ராசி
ரிஷப ராசியில் குரு பகவான் முதல் வீட்டில் நுழைகிறார். இதனால் நல்ல யோகம் கிடைத்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட காலமாக இருந்த வேலைகள் முடியும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிப்பதோடு, குழந்தைகளால் நல்ல செய்தி வரும்.
மகர ராசி
மகர ராசியில் ஐந்தாவது வீட்டில் குரு பகவான் செல்வதால் உங்களுடைய கனவுகள் நினைவாகும். குழந்தைகளால் நல்ல செய்தி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
காதல் வாழ்க்கை அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாவது மட்டுமல்லாமல் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்ப ராசி
கும்ப ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளதால் நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும்.ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |