தவறியும் உங்கள் வீடுகளில் அனுமன் படத்தை இந்த திசையில் வைத்து விடாதீர்கள்
பலருடைய பூஜையறைகளில் அனுமன் படத்தை வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக இருக்கிறது. அப்படியாக, அனுமன் படத்தை வீடுகளில் வழிபாடு செய்யும்பொழுது நாம் சரியான திசையில் வைத்து வழிபாடு செய்யும்பொழுது தான் நமக்கு அதற்குரிய பலன் கிடைக்கிறது.
ஒருவர் பலம் இழந்து நிற்கின்ற பொழுது அனுமனை வழிபாடு செய்தால் அவர்களுக்கு முன்பை விட பல மடங்கு பலம் கிடைக்கிறது.
அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள். அப்படியாக, வாஸ்து சாஸ்திரப்படி அனுமன் படத்தை நம் வீடுகளில் வடகிழக்கு மூலையில் அதாவது ஈசான்ய மூலையில் வைப்பது நமக்கு சிறந்த பலனை கொடுக்கும்.

காரணம், இந்த மூலைகள்தான் நமக்கு அதிக அளவிலான பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. ஆனால் உங்கள் வீடுகளில் நீங்கள் எதிர்மறையான சக்திகளை உணர்கிறீர்கள் என்றால் தெற்கு திசையில் அனுமன் படத்தை வைக்கலாம். வீடுகளில் ஹனுமன் படத்தை வைக்கும் பொழுது நாம் சாந்தமான படத்தை வைப்பது அவசியமாக இருக்கிறது.
அப்பொழுது தான் நமக்கு வீட்டில் அமைதியும் சந்தோஷமும் கிடைக்கிறது. கோபமான மற்றும் முக்கியமான படத்தை வீடுகளில் வைக்க கூடாது. வீடுகளில் பஞ்சமுகி அனுமன் படத்தை வைப்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு நீங்கள் பஞ்சமுகி படத்தை வீடுகளில் வைக்க வேண்டும் என்று எண்ணினால் வீட்டின் நுழைவாயிலில் இந்த படத்தை வைக்கலாம்.

இவ்வாறுவைக்கும் பொழுது நம் வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை சக்திகளும் வீட்டை நெருங்காத அளவிற்கு அனுமன் நம்மை பாதுகாக்கிறார். மேலும், வாஸ்து சாஸ்திரப்படி அனுமன் படத்தை நாம் படுக்கையறையில் வைக்க கூடாது.
அவ்வாறு வைக்கும் பொழுது நமக்கு தோஷமும் கணவன் மனைவி இடையே சண்டையும் உருவாகிறது. அதோடு, வீடுகளில் நீங்கள் அனுமன் படத்தை வைத்து வழிபாடு செய்யும் பொழுது கட்டாயமாக எப்பொழுதும் சுத்தமாகவும் அனுமனுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்வதும் அவசியமாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |