வீட்டில் விநாயகர் சிலையை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்?
முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியான நாள் தான் விநாயகர் சதுர்த்தி.அன்றைய நாளில் விநாயகருக்கு பிடித்த அவல் பொறி கொழுக்கட்டை படைத்து வழிபாடு செய்வோம். அபப்டியாக எவர் ஒருவர் விநாயகரை மனதில் நினைத்து காரியம் தொடங்குகிறாரோ அவருக்கு வாழ்க்கையில் காரிய தடை என்பதே இல்லை.
அந்த வகையில் சாஸ்திர ரீதியாகவும் எந்த ஒரு காரியம் தொடங்கும் முன் தங்கு தடை இன்றி நல்ல முறையில் அமைய விநாயகர் வழிபாடு மேற்கொள்வோம்.மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று நம் வீட்டில் விநாயகரின் சிலை வைத்து வழிபாடு செய்வோம்.
அப்படியாக நம் வழிபடும் விநாயகர் சிலையை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.
இடப்பக்கம்:
விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே இடது பக்கமாக தன் தாயான கௌரியை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்.
இந்நாளில் விநாயகருடன் சேர்த்து கௌரியையும் வைத்து பலரும் வழிபாடு செய்வார்கள். விநாயகரின் தும்பிக்கை கௌரி தேவியை நோக்கி இடது பக்கமாக இருக்குமாறு வைத்து வழிபடுவது சிறந்தவை ஆகும்.
பின்புறம்
விநாயகரின் சிலையை பின்புறம் வீட்டில் உள்ள எந்தவொரு அறையையும் பார்த்தவாறு இருக்கக்கூடாது. விநாயகர்வளம் தரும் கடவுள் ஆவார்.
அவரின் பின்புறம் வறுமையை குறிக்கும். அதனால் தான் அவரின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
தென் திசை
தென்புற திசையில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் தான் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். உங்கள் வீட்டின் பூஜை அறையும் கூட தெற்கு திசையில் இருக்கக்கூடாது.
கழிவறை
கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது.
உலோகம்
விநாயகர் சிலை உலோகத்தில் செய்திருந்தால், வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
மாடிப்படி
மாடிப்படி இருக்கும் வீட்டில், கண்டிப்பாக மாடிப்படிக்கு அடியில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. இது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு குறிப்பிட்ட திசைகள் பார்த்து விநாயகரை வைத்து வழிபட்டு நம் வாழ்க்கையில் எல்லாம் வளமும் பெற்று விநாயகரின் பரிபூர்ண அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |