உலகை ஆளும் தன்மை கொண்ட 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
தலைமைத்துவம் என்பது நாம் வளர்த்து கொள்ளும் பண்பு என்றாலும் இயல்பாகவே சிலர் அமையப்பெற்று இருப்பார்கள்.அந்த நிறுவகிக்கும் பண்பு இருந்தால் தான் ஒரு தொழில் நிறுவனம் அல்லது எந்த ஒரு விஷயத்தையும் தலைமை பொறுப்பு ஏற்று எதையும் வழிநடத்தி சாதனை செய்ய முடியும்.
அப்படியாக சில ராசிக்காரர்கள் இயல்பாகவே தலைமை பண்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் எப்பொழுதுமே உணர்ச்சி ரீதியாக முடிவு எடுக்கமாட்டார்கள்.இவர்கள் மற்றவர்கள் தேவைகளை புரிந்து கொண்டு நடப்பவர்களாக இருப்பார்கள்.எப்பொழுதும் இவர்கள் பிறரை பாதுகாக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.தொழில் என்று வந்து விட்டால் தங்களுடைய ஊழியர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவதில் மிகவும் திறமைசாலியாக இருப்பார்கள்.எவ்வளவு கடினமான சூழ்நிலை இருந்தாலும் அதை தைரியமாக கையாள்வார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் அவர்களுடைய பேச்சு திறமையால் ஒருவரை வேலை எளிதில் வாங்கி விடுவார்கள்.இவர்கள் எல்லோருடைய ஆலோசனையும் கேட்டு அதில் நல்லதை ஏற்றும் கொள்ளும் பண்பு உடையவர்கள்.இவர்களுடைய எதார்த்தமான சிந்தனை பலரையும் தன் வசம் செய்து விடும்.உடன் வேலைசெய்பவருக்கு ஏதெனும் பிரச்சன்னை என்றால் முன் வந்து உதவி செய்வார்கள்.
துலாம்:
இவர்கள் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை விரும்புவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இயற்கையிலே ஒரு தலைவருக்கான சிறந்த பண்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.மனிதர்கள் நலன் பற்றிய சிந்தனை எப்பொழுதும் இவர்களுக்கு இருக்கும்.சமுதாயத்தில் ஏதேனும் பிரச்சன்னை என்றால் முதலில் ஓடி வந்து குரல்கொடுக்கும் ராசியாக துலாம் ராசி இருப்பார்கள்.எல்லோருக்கும் கிடைக்கவேண்டிய நியாயத்தை அவர்கள் சரியாக செய்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |