கோடீஸ்வர யோகத்தோடு பிறந்த 3 பெண் ராசிகள் யார் தெரியுமா ?
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக பிறக்கும் பொழுதே கோடீஸ்வர யோகத்தோடு இந்த 4 ராசி பெண்கள் பிறக்கிறார்கள் என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் ஆளுமை கொண்ட பெண்களாக காணப்படுவார்கள். இவர்களுக்கு பணப்புழக்கம் என்பது சர்வ சாதாரணமாக இருக்கும். மனதில் உறுதியும் துணிச்சலும் கொண்டு எல்லாவற்றையும் செய்வார்கள்.
இவர்கள் ஒன்றை அடைய வேண்டும் என்று எண்ணி விட்டால் அதை கட்டாயம் அடைந்தே தீர்வார்கள். இவர்களின் புத்திக்கூர்மையும் துணிச்சலும் இவர்களை கோடீஸ்வரராக மாற்றும் அமைப்பு கொண்டது.
ரிஷபம்:
ரிஷப ராசி பெண்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு விஷயத்தை ஆலோசனை கேட்டு செய்தால் அது கட்டாயம் வெற்றியில் முடியும். இவர்கள் செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
வாழ்க்கை பற்றிய நல்ல புரிதலோடு இருப்பார்கள். இவர்கள் கடும் உழைப்பாளிகள். ஒரு விஷயத்தை செய்யவேண்டும் என்று தொடங்கி விட்டால் அதை முடிக்காமல் பின் வாங்க மாட்டேன் என்ற எண்ணமே இவர்களை கோடீஸ்வரர் ஆக்குகிறது.
கும்பம்:
கும்ப ராசி பெண்கள் எப்பொழுதும் முற்போக்கு சிந்தனையுடன் இருப்பார்கள். இவர்களுக்கு சவால்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எப்பொழுதும் இலக்கு, லட்சியம் என்று இருப்பார்கள்.
வேலை செய்யும் இடத்தில் தலைமை பொறுப்பு பெற்றவர்களாக காணப்படுவார்கள். இவர்களுக்கு அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவர்கள் முயற்சியாலும் சாதுரிய புத்தியாலும் கோடிகளை சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |