மகாசிவராத்திரி அன்று மறந்தும் இந்த நிற ஆடைகள் அணியாதீர்கள்
சிவபெருமான் என்றால் அவருடைய வழிபாட்டிற்குரிய தினமாக பிரதோஷம் மற்றும் சிவராத்திரி கருதப்படுகிறது.மேலும் பெண்கள் வழிபாட்டிற்கு 9 நாட்கள் நவராத்திரி என்றும் ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும் என்றும் புராணங்கள் கூறுகிறது.
இவ்வளவு முக்கியமான நாளில் சிவபெருமானை மனதில் நினைத்து வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். அப்படியாக மஹாசிவராத்திரி மாசி மாதம் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, மகாசிவராத்திரி பிப்ரவரி 26, புதன்கிழமை வருகிறது.அன்றைய தினம் பலரும் கண்விழித்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.சிலர் அவர்களுடைய குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்வார்கள் சிலர் சிவன் ஆலயம் சென்று வழிபாடு மேற்கொள்ளவார்கள்.
ஆக,அன்றைய தினம் சிவனை மனதார நினைத்து வழிபாடு செய்வதால் நாம் நினைத்த காரியங்களை சாதிக்கலாம் என்பது நம்பிக்கை.இருந்தாலும் சிவபெருமானின் அருளை பெற நாம் மறந்தும் அன்றைய தினம் குறிப்பிட்ட சில நிற ஆடைகளை அணியக்கூடாது என்று சொல்கிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.
மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானின் அருளை பெற வழிபடும் போது பச்சை நிற ஆடைகளை அணிவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.சிவபெருமான் இயற்கையை நேசிப்பவர்,ஆதலால் நாளைய தினம் சிவனின் அருளை பெற அவருக்கு மிகவும் பிடித்த பச்சை நிற ஆடைகள் இல்லையென்றால், வெள்ளை, சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை அணியலாம்.
ஆக கோயிலுக்கு செல்பவர்கள் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது.கருப்பு சிவபெருமானின் கோபத்திற்கு உரிய நிறம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |