வீட்டின் எந்தெந்த இடங்களில் விளக்கு ஏற்ற வேண்டும்?
இந்துக்கள் அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றி பூஜை செய்வது பாரம்பரிய வழக்கம் ஆகும்.
தீபம் ஏற்றுவதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் தன்னம்பிக்கையை ஏற்படுத்தகூடிய சிந்தனையை ஏற்படுத்தும்.
பசு நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகியவைகளை சமஅளவில் கலந்து தீபம் ஏற்றுவதால் தேவஆகர்ஸ்ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும் தரும்.
வீடுகளில் தீபம் வைக்கும் இடங்கள்
- திண்ணைகளில்- 4 விளக்குகள்
- மாடக்குழிகளில்- 2 விளக்குகள்
- நிலைப்படியில்- 2 விளக்குகள்
- வாசல் நடைகளில்- 2 விளக்குகள்
- முற்றத்தில்- 2 விளக்குகள்
தீபங்களின் நன்மை
பூஜையறையில்- இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.
சமையல் அறையில்- ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி- எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.