நாம் மறந்தும் வீட்டில் வளர்க்ககூடாத செடிகள்
நம் அனைவருக்குமே வீடுகளில் தோட்டம் வைத்து செடிகள் வளர்க்க வேண்டும் என்று ஆசைகள் இருக்கும்.இருந்தாலும் ஜோதிடம் ரீதியாக நாம் வீடுகளில் நாம் நினைத்த மரங்களை வளர்த்து விட முடியாது.அதற்கான சில வரையறைகள் இருக்கிறது.
அதாவது நாம் சில செடிகள் மரங்கள் வீட்டில் வளர்க்கலாம் ஆனால் சில செடிகள் மரங்கள் வீட்டில் வளர்க்கக்கூடாது.அவ்வாறு என்ன செடிகள் வளர்க்கலாம்?என்ன செடிகள் வளர்க்கக்கூடாது என்று பார்ப்போம்.
நம் வீடுகளில் செல்வம் பெருகவும்,சந்தோசம் அதிகரிக்கவும்,மங்களம் உண்டாகவும் வளர்க்க நிறைய செடிகள் இருக்கிறது.ஆனால் குறிப்பிட்ட சில செடிகள் மரங்கள் வளர்ப்பதால் அவை வீட்டில் எதிற்மறை ஆற்றல் உருவாக்குகிறது. இதனால், வீட்டில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம் என்று சொல்லப்படுகிறது.
அப்படியாக நம் வீடுகளில் வளர்க்ககூடாத மரங்கள் பட்டியலில் முதலில் இலந்தை பழம் மரம், புளி மற்றும் அரச மரங்கள் உள்ளன. ஏனெனில்,இந்த மரங்கள் வீட்டிற்கு எதிர்மறை சக்திகளை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.மேலும்,இந்த மரங்கள் வளர்ப்பதால் வீட்டில் வறுமை பொருளாதார நஷ்டம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
வீட்டிற்குள் புளி, வாழை, பலா மற்றும் அரச மரங்களை நடக்கூடாது.நம் வீடுகளில் எப்பொழுதும் நறுமணம் வீசும் மரங்களே நட வேண்டும்.அதாவது சாமந்தி, ரோஜா, சூரியகாந்தி அல்லது கொய்யா மரங்களை நடலாம். ஒரு மாம்பழம் அல்லது காய்கறிச் செடியைக்கூட நடலாம்.
இந்த மரங்கள் அனைத்தும் மங்களகரமான தன்மை கொண்டது. இந்த மரங்கள் வீட்டில் நடும் பொழுது வீட்டில் நேர்மறை சக்திகள் பெருகும் என்று சொல்லப்படுகிறது.அதோடு பொருளாதார சம்பந்தமான பிரச்சனைகள் குறையும் என்று சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |