மறந்தும் இந்த இரண்டு ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிறு அணியக்கூடாது
எந்த கோயிலுக்கு சென்றாலும் கோயில் வாசலில் வண்ண நிறங்களில் பல வகையான கயிறுகள் விற்கப்படும்.அதை மக்கள் விரும்பி வாங்கி அணிவதுண்டு.நாம் இவ்வாறு கயிறுகள் அணிவதால் நம்மை நோக்கி வரும் எதிர்மறை சக்திகள் விலகும்.
அதே போல் நாம் எந்த கோயிலுக்கு சென்றாலும் சுவாமி பிரசாதம் உடன் சேர்த்து கயிறுகள் வாங்கி நம் நெருங்கிய உறவுகளுக்கு கொடுப்போம்.கயிறு பல வண்ணங்களில் விறக்கப்படுகிறது.அதில் பெரும்பாலான மக்கள் அணிவது சிவப்பு மற்றும் கருப்பு நிற கயிறு தான்.அப்படியாக ஒரு சில ராசிகள் இந்த சிவப்பு நிற கயிறுகளை அணியக்கூடாது.அதை பற்றி பார்ப்போம்.
சனி பகவானால் சில ராசிக்காரர்கள் சிகப்பு கயிறை கட்டினால் நன்மை கொடுக்காது. கும்பம், மீனம் உள்ளிட்ட ராசியினர் எப்போதும் சிகப்பு கயிறை கட்டவே கூடாது.அவ்வாறு அவர்கள் கட்டும் பொழுது அவர்களுக்கு எதிர்பாராத ஆபத்துகள் வரும்.
அதனால் அந்த ராசியினர் இளஞ்சிகப்பு, மஞ்சள், கருப்பு நிற கயிறுகளை அணியலாம்.ஆனால் மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசியினர் சிகப்பு நிற கயிறு பெரும்பாலும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
மேலும் சனி பகவான் யாரையாவது பிடிக்கவேண்டும் என்றால் முதலில் ஒருவரது காலைத்தான் பிடிப்பார் இதனால்தான் கால்களை கழுவும் போது கால்களின் குதிகளையும் கழுவ வேண்டும் என்பார்கள்.மேலும், கருப்பு கயிறு கட்டினால் ராகு கேது தோஷம் நீங்கும் என்கிறார்கள்.
மேலும் கருப்பு கயிறு கட்டும் பொழுது கருப்பு கயிறு கட்டும் போது அதில் 9 முடிச்சுகள் இருக்க வேண்டும். கயிற்றை பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் அணிய வேண்டும். சிலருக்கு கருப்பு ஆகாவிட்டால் சிகப்பு கயிறை கட்டலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |