குரு வக்ர நிவர்த்தி-விபரீத ராஜயோகம் பெரும் ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு 2024 அக்டோபர் 9 முதல் ரிஷப ராசியில் வக்ரமாக ஆக உள்ளார்.இந்த குரு வக்ர கதியானது சிலருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.அப்படியாக பிப்ரவரி 4ஆம் தேதி 2025 முதல் குரு வக்ரநிவர்த்தி அடைந்து ரிஷப ராசியில் நேரடியாக பயணிக்க தொடங்குகிறார்.
அதாவது இன்று பிற்பகல் 3.09மணிக்கு குருவின் நேர்கதி பயணம் தொடங்குகிறது.இந்த குரு வக்ர நிவர்தியால் எந்த ராசிக்காரர்கள் கஷ்ட நஷ்ட காலங்களில் இருந்த்து விடுபட்டு நல்ல நேரத்தை நெருங்க உள்ளார்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.மனதில் தெளிவான சிந்தனை தோன்றும்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் விலகி நன்மையாக அமையும்.ஒரு சிலருக்கு வெளியார் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்:
குரு ரிஷப ராசியில் நேர்கதியில் பயணம் செய்ய உள்ளார்.இது இவர்களுக்கு பல விதமான நன்மை கொடுக்கும்.நீண்ட நாள் வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்து இருக்கும்.தாய் வழி உறவால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் உள்ள பல குழப்பத்திற்கு விடை கொடுக்கும் காலம் ஆகும்.சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.இரண்டாவது திருமணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.அண்ணன் தம்பி உதவியாக இருப்பார்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு குருவின் நேர்த்தி பயணம் பொருளாதாரத்தில் நல்ல லாபம் பெற்று கொடுக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உருவாகும்.உங்களுடைய வீட்டில் ஏற்பட்ட காரிய தடை விலகி பிள்ளைகள் நலனில் முன்னேற்றம் இருக்கும்.சிலர் கோயில் யாத்திரை செல்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |