12 ராசிகளில் யாருக்கு அதிக பிடிவாதம் அதிகம்..தெரியுமா?
மனிதர்களுடைய குணம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக இருக்கிறது. அந்த வகையில், ஒரு சிலர் லட்சியத்தை அடைவதற்காக பிடிவாதம் கொள்வார்கள்.
ஒரு சிலர் வீண் பிடிவாதம் கொண்டு அவர்கள் வாழ்க்கையையும் சுற்றி உள்ளவர்களுடைய வாழ்க்கையும் கெடுத்து விடுவார்கள். அந்த வகையில், எந்த ராசிக்காரர்களுக்கு அதிக அளவில் பிடிவாத குணம் கொண்டவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் லட்சியத்தோடு போராடக் கூடியவர்கள். ஆனால், இவர்களிடம் பிடிவாத குணம் இருக்கவே இருக்காது.
ரிஷபம்:
இவர்கள் தான் நம்பர் ஒன் பிடிவாத குணம் கொண்டவர்கள். இவர்கள் உயிரை விடவும் மேலாக தன்னுடைய பிடிவாதத்தை பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
மிதுனம்:
இவர்கள் தான் பிடிவாதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். ஆனால், இவர்களால் இருக்க முடியாது.
கடகம்:
இவர்கள் பிடிவாத குணங்களில் நம்பர் நான்கு என்கின்ற இடத்தை பிடிக்கிறார்கள். இவர்களை யாராவது உதாசீனப்படுத்தினாலும், காயப்படுத்தினாலும் இறுதிவரை அவர்களிடம் பேசமாட்டார்கள்.
சிம்மம்:
தேவையில்லாத பிடிவாதம் அதிகமாக இருக்கும். ஆனால் அன்பாக பேசினால் அந்த பிடிவாதம் மறைந்துவிடும்.
கன்னி:
இவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் ஆறுதலாக பேசிவிட்டாலே அவர்களுடைய பிடிவாத குணம் காணாமல் ஆகிவிடும்.
துலாம்:
இவர்களால் எந்த சூழ்நிலையிலும் பிடிவாத குணத்தோடு இருக்கவே முடியாது.
விருச்சிகம்:
இவர்கள்தான் நம்பர் இரண்டு என்கின்ற பிடிவாத இடத்தில் இருக்கிறார்கள். ஒரு காரியத்தை முடித்து விட வேண்டும் என்ற பிடிவாதம் அவர்களிடம் அதிகம் இருக்கும்.
தனுசு:
இவர்களுக்கு பிடிவாதம் பிடிப்பது என்பது பிடிக்காத ஒன்று. சுதந்திரமாக இவர்கள் வழியில் விட்டு விடுவது தான் விரும்புவார்கள்.
மகரம்:
இவர்கள்தான் நம்பர் மூன்றாவது பிடிவாத குணம் கொண்டவர்கள். யாராவது இவர்களை அவமானம் செய்தால் அவர்கள் முன்பு மிகப் பெரிய அளவில் வாழ்ந்து காட்டி விடுவார்கள்.
கும்பம்:
இவர்களிடம் பிடிவாதம் அவ்வப்போது காணப்படும். ஆனால், அவையெல்லாம் சிறிது நேரம் மட்டும்தான்.
மீனம்:
இவர்கள் முன்பு அழுதாலே போதும் இவர்களுடைய பிடிவாதம் காணாமல் போய்விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |