இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் தூண்டாதீங்க! விளைவு மோசமாக இருக்கும்
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நிறம், உயரம், பருமன் என்பவற்றில், அறிவு, திறமை என்பவற்றில் வேறுப்பாடு இருப்பதை போன்றே அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் வேறுபாடு இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் எதிர்மறை குணங்களில் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட அதிகமான கோப உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் கோபத்தை தூண்டுவது மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட 3 பெண் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் - இந்த ராசியினரில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தைரியசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் இவர்களின் கோபத்தை தூண்டிவிட்டால் ஒரு எரிமலை வெடிப்பதை போல் பாரிய பக்க வி்ளைவுகளையும் சேதாரங்களையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பணிந்து போகும் அளவுக்கு, கோபப்படுத்துபவர்ளை வாட்டி எடுக்கவும் செய்வார்கள். இவர்கள் கோபம் கட்டுக்கு அடங்காததாக காளைபோல் வீரியம் மிக்கதாக இருக்கும்.
ரிஷபம் -காதல் , அழகு மற்றும் ஆடபம்பரத்திக் கிரகமாக சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் உண்மைக்கும் நேர்மையான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்தளுக்கு அமைதியாக இருக்கின்றார்களோ அதை விட பல மடங்கு கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். இவர்களை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் அன்பு மட்டும் தான்.
அதுவே இவர்களை அன்பின் பெயரால் ஏமாற்றிவிட்டால் அந்த நபருக்கு வாழும் போதே நரகத்தை காட்டிவிடுவார்கள்.
சிம்மம் - கடின உழைப்பு மற்றும் நேர்மையான குணத்துக்கும் பெயர் பெற்ற சிம்ம ராசி பெண்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
இவர்கள் இருக்கும் இடத்தில் தாங்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்ளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட போது இவர்களின் மோசமான முகம் வெளிப்படும். இவர்கள் கோபத்தில் விளைவுகள் குறித்து சிந்திப்பதே கிடையாது.