திருமணமே வேண்டாம் என்று சிங்கிளா வாழ விரும்பும் 3 ராசிகள் யார் தெரியுமா?
திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம் ஆகும். கட்டாயம் மனிதராக பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை அவசியம் தேவை. ஆனால், சிலருக்கு திருமணத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு இருக்காது. சிலருக்கு குடும்ப சூழல் காரணமாக திருமணத்தின் மீது ஆர்வம் குறைந்துக் காணப்படுவார்கள்.
சிலருக்கு காரணமே இல்லாமல் திருமணம் வேண்டாம் என்று சொல்லுவார்கள். அப்படியாக, எந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு திருமணமே வேண்டாம் என்று சுதந்திரமாக வாழ விரும்பும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் தொழில் வாழ்க்கைக்கே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வாழக் கூடியவர்கள். இவர்கள் எப்பொழுதும் தான் முன்னேற வேண்டும், அதற்கான நேரத்தை செலவிட வேண்டும் என்றே நினைத்துக் கொண்டு இருப்பவர்கள்.
மேலும், இவர்கள் தனக்கு துணை இல்லாமலும் சந்தோஷமாக வாழ முடியும் என்று நம்பக்கூடியவர்கள். அதலால், இவர்களுக்கு எப்பொழுதும் திருமணம் என்பது அவ்வளவு பிடித்தம் இல்லாமல் இருப்பதை காணலாம்.
துலாம்:
துலாம் ராசியினர் ஒரு தனிமை விரும்பிகள் என்றே சொல்லலாம். இவர்கள் எப்பொழுதும் தனிமையில் தங்களுக்கான பிடித்த விஷயங்களை செய்து நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைப்பவர்கள். மேலும், இவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
எப்பொழுதும் சுதந்தர பறவையாக இருக்க நினைப்பவர்கள். அதனால், இவர்களிடம் சென்று யாராவது அவர்களை திருமணம் செய்துக் கொள்ளும் படி கட்டாயப்படுத்தினால் அவர்களிடம் கோபம் கொள்வதை நாம் பார்க்கலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனியாக சில விஷயங்கள் தேடிக் கற்றுக் கொள்ள ஆசை கொள்பவர்கள். இவர்களுக்கு பொறுப்புகள் என்றால் அவ்வளவாக பிடிக்காத ஒன்று. அதனால் பெரும்பாலான சூழ்நிலையில் உறவுகளை பிரிந்து வாழ விருப்பம் கொள்வார்கள்.
அதேப்போல், இவர்களுக்கு சிறிய விமர்சனம் கூட பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். இவர்கள் தான் தனியாக இருந்து வாழ்க்கையை கழித்து விடலாம் என்று நினைப்பவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







