ஜாதக ஆலயத்திருப்பணி செய்யும் யோகம் யாருக்கு உண்டு தெரியுமா?
ஆலயம் என்பது வெறும் கோயில் சென்று வழிபாடு செய்வது அல்ல. ஆலயம் கட்டும் பணி, திருப்பணி, அன்னதானம் விளக்கேற்றுவது, உற்சவங்கள் மற்றும் நிர்வாகம் என எல்லாம் தூய்மையான தர்ம பாதையாகும்.
அந்த வகையில், ஜாதகத்தில் யாருக்கு ஆலயம் கட்டக் கூடிய யோகம் இருக்கும் என்று பார்ப்போம். இந்த யோகம் என்பது ஒரு கிரகம் மட்டும் சார்ந்ததல்ல.
தர்மஸ்தானமான ஒன்பதாம் வீடு மற்றும் செலவு ஸ்தானமான 12 வது வீடு மற்றும் சூரியன், கேது, சனி ஆகிய கிரகங்களின் தொடர்பு வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், ஒருவருக்கு ஒன்பதாம் வீடு பலமாக இருந்தால் அதன் அதிபதி லக்னத்துடன் நன்றாக இணைந்து இருப்பவர்களுக்கும் இந்த ஆர்வம் இயல்பாகவே இருக்கும்.
அதேபோல், லக்னாதிபதி 9ஆம் அல்லது 12 ஆம் வீட்டில் நின்றாலும் குரு கேந்திரம் அல்லது சுப நிலையில் இருந்தாலும் ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
சூரியன் ஒன்பதாம் வீட்டில் நின்றாலும் ஆலய சார்ந்த அதிகாரம் மற்றும் நிர்வாக பொறுப்புகள் தேடி வரும்.
அதேபோல், தனுசு மற்றும் மீன லக்னக்காரர்களுக்கும் இந்த தொண்டு செய்யும் பணி இயற்கையாகவே இருக்கும், மேலும், ஆலய பணிகளில் தர்மம் ரொம்ப முக்கியம். வெறும் பெயருக்காக மட்டும் செய்வது கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |