ஜோதிடம்: உங்கள் ராசிக்கு எதிரி ராசி எது தெரியுமா?

By Sakthi Raj Mar 06, 2026 01:00 PM GMT
Report

பொதுவாகவே நாம் ஒரு சிலரிடம் அவ்வளவாக ஒன்றிணைந்து செல்ல முடியாது. இதற்கு அவர்களுடைய குணநலன்கள் காரணம் என்றாலும், சமயங்களில் நம்முடைய ராசி பொருத்தமும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

அதாவது 12 ராசிகளுக்கும் ஒரு சில எதிரி ராசிகள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்க முடியாது. இருந்தால் பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும். அப்படியாக எந்த ராசிக்கு எந்த ராசிகள் ஒற்றுப் போகாத ராசி என்று பார்ப்போம்.

ஜோதிடம்: உங்கள் ராசிக்கு எதிரி ராசி எது தெரியுமா? | Who Is Your Enemy According Zodiac Sign

2026-ல் தொடங்கிய சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாற்றில் இன்று என்ன நடந்தது?

2026-ல் தொடங்கிய சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாற்றில் இன்று என்ன நடந்தது?

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களுக்கு சமயங்களில் மேஷ ராசியினரும் சிம்ம ராசிக்காரர்களும் எதிராக அமைகிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் சுயநலம் கொண்டவர்கள் என்பதால் இருவரும் ஒரு இடத்தில் ஒன்றாக இருக்க முடியாது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு கும்பம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் எதிரியாக இருப்பார்கள். இவர்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களுக்கு மிதுன ராசிக்காரர்களும், மகர ராசிக்காரர்களும் எதிரியாக இருக்கிறார்கள். காரணம் இவர்கள் இருவருமே எப்பொழுதும் தான் பேசுவது தான் சரி என்று எண்ணக்கூடியவர்கள் ஆதலால் இவர்களுக்கு இடையே பிரச்சனைகள் வருகிறது.

கடகம் :

கடக ராசிக்காரர்களுக்கு மேஷம் மற்றும் தனுசு ராசிகள் எதிரிகளாக இருக்கிறார்கள். காரணம், மேஷம் மற்றும் தனுசு ராசியினர் சுதந்திரமாக சுற்றக்கூடியவர்கள். கடக ராசியினர் உணர்வுகள் இடையே பிணைப்பு கொண்டவர்கள். அதனால் இவர்களுக்கு ஒற்றுப் போவதில்லை.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் எதிரியாக இருக்கிறார். காரணம் இந்த இரண்டு ராசிகளும் ஆளுமை பண்பு கொண்டவர்கள் சிம்ம ராசியினருக்கு எப்பொழுதும் தானே முன்னிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு மேஷம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் எதிரியாக இருக்கிறார்கள். கன்னி ராசியினருக்கு பெரும்பாலும் சுதந்திரமாக ஒருவர் செயல்படுவது பல நேரங்களில் பிடித்தமானதாக அமைவதில்லை.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களுக்கு விருச்சிகம் மற்றும் கன்னியுடன் அவ்வளவு நெருக்கமான உறவுகள் ஏற்படுவதில்லை. காரணம் துலாம் ராசியினர் அன்பாக ஒரு பழக வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள். ஆனால் விருச்சிகம் கன்னி அன்பிற்கு அவ்வளவு முக்கியத்துவம் காட்ட மாட்டார்கள்.

ஆன்மீகம் நமக்கு கொடுக்கக்கூடிய முக்கியமான சவால் என்ன தெரியுமா?

ஆன்மீகம் நமக்கு கொடுக்கக்கூடிய முக்கியமான சவால் என்ன தெரியுமா?

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிம்மம் மற்றும் கும்ப ராசியினர் எதிரிகளாக இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றாக இருந்தால் அடிக்கடி சண்டையிடுவது மட்டுமே வழக்கமாக இருக்கும். எந்த ஒரு கருத்தும் அவர்களுக்கு இடையே ஒற்றுப் போவதில்லை.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு மீன மற்றும் கும்ப ராசிக்காரர்கள் உடன் அவ்வளவு நெருக்கமான பழக்கம் வருவதில்லை. இவர்கள் இடையே நிறைய கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் அடிக்கடி வருவதை காணலாம்.

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு கடகம் மற்றும் துலாம் ராசியினர் எதிரி ராசியாக இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் மகர ராசியினருக்கு கடகம் மற்றும் துலாம் ராசியினர் அறிமுகம் ஒரு கசப்பான அறிமுகமாக தான் அமையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு மகரம் மற்றும் ரிஷபம் எதிரி ராசிகளாக இருக்கிறார்கள். கும்ப ராசியினர் சுயமாக செயல்பட வேண்டும் என்று நினைப்பதால் மகரம் மற்றும் ரிஷப ராசியுடன் பழகும் பொழுது சில கருத்து வேறுபாடுகள் வருகிறது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்கள் எதிரியாக இருக்கிறார்கள். காரணம் மீன ராசிக்காரர்கள் கண்டிப்பாக இருக்க விரும்புவார்கள். ஆனால் மிதுனம் கன்னி ராசியினர் தான் போகும் பாதை தான் சரி என்று நினைப்பதால் பிரச்சனை வருகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US