ஒருவர் தலை எழுத்தையே மாற்றக்கூடிய ராகு பகவான்.. யாருக்கு அதீத நன்மை செய்வார்?
ஜோதிடத்தில் ராகு பகவான் மாயை கிரகங்களாக பார்க்கப்படுகிறார். அந்த வகையில், ராகு பகவான் இருக்கக்கூடிய இடமும் அவருடன் இணைந்து இருக்கக்கூடிய கிரகங்களுடைய அமைப்பும் தான் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை கொடுக்கிறது.
அந்த வகையில், ராகு நன்மையை செய்வாரா? தீமையை செய்வாரா? என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, ராகு ஒருவருடைய ஜாதகத்தில் முற்பிறவி கர்மாவின் அடிப்படையில் திடீர் அதிர்ஷ்டமாக திடீர் சரிவையும் தரக்கூடியது என்று சொல்லப்படுகிறது.
மேலும், ராகு 3,6, 10 அல்லது 11 ஆம் வீடுகளில் சுப கிரகங்களான குரு அல்லது சுக்கிரன் ஆகியோருடன் இணைந்து இருக்கும் பொழுது இவர்களுக்கு எதிர் பாராத விதமான பணவரவையும் புகழையும் பெற்றுக் கொடுக்கிறது.

அதுவே, ராகு சனி, செவ்வாய் அல்லது சூரியன் போன்ற அசுப கிரகங்களுடன் சேரும் பொழுது அதுவும் 8 ,12 ஆம் வீடுகளில் அமரும் பொழுது கடன் நோய் விபத்து மன உளைச்சல் போன்ற சிக்கல்களை உருவாக்குகிறது.
மேலும், குழந்தைகளுக்கு சிறுவயதில் ராகு தசாபுத்தி வருகின்ற பொழுது அவர்கள் படிப்பில் பாதிப்படையலாம். ஆனால், கலை மற்றும் பிற தனித் திறமைகளில் அவர்கள் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் ராகுவினுடைய பாதிப்புகள் குறைய மகான்கள் உடைய ஜீவசமாதி அல்லது சுயம்புலிங்க ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது ஒரு நல்ல பலன்களை கொடுக்கும்.
அதோடு மன அமைதியையும் தரும். மேலும், ராகுவினுடைய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அதீத ஆசைகளை குறைத்துக் கொண்டு பற்றற்ற நிலையை மேற்கொள்வது ஒரு நல்ல பரிகாரமாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |