காசியில் எரிந்த சடலத்தில் 94 என்று ஏன் எழுதுகிறார்கள் தெரியுமா?
நம்முடைய சிவ வழிபாட்டில் மிக முக்கியமான இடமாக மற்றும் மிக முக்கியமான தலமாக விளங்க கூடியது காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகும். அதாவது ஒருவருக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் கட்டாயம் காசி பயணம் சென்று வரவேண்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
மேலும் காசி மன்னில் கால் வைத்தவர்களுக்கு ஈசனின் அருளால் வாழ்க்கையில் முக்தி கிடைப்பதாக பக்தர்கள் காலம் காலமாக வைத்திருக்கும் நம்பிக்கையாகும். மேலும் காசியில் இறந்தவர்களின் உடலை நாம் எரிக்கும் பொழுது அவர்கள் நேராக சொர்க்கலோகம் செல்வதாக ஐதிகம்.
இதனால் பலரும் தங்களுடைய கடைசி காலங்களில் காசியில் கழித்து அவர்களுடைய உடலை அங்கே இறப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து விடுகிறார்கள். மேலும் காசியில் இறக்கும் நிலையில் அவர்களுடைய சடலங்கள் மணிகர்ணிகா காட் என்ற சடலங்களை எரிக்கும் இடத்தில் தகனம் செய்யப்படுகிறது.
அவ்வாறு தகனம் செய்யப்படும் உடல்கள் சாம்பலான பிறகு அதில் 94 என்று எழுதப்படும் வழக்கம் காசியில் உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் இவ்வாறு எழுதும் பழக்கம் இருப்பதை பலரும் அறியாமல் இருப்பதும் இருந்து வருகிறது. அப்படியாக காசியில் எதற்காக ஒரு சடலம் எரிந்து சாம்பலான பிறகு 94 என்று எழுதுகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மணிகர்ணிகா காட் என்பது நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான படித்துத்துறையாகும். இங்கு இறந்தவர்களின் உடல்களை நாம் தகனம் செய்வதால் மோட்சம் கிடைப்பதாக இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.
அதோடு இங்கு 24 மணி நேரமும் தகன சடங்குகள் நடைபெறும் ஒரு முக்கிய புனித தலமாகும். இங்குள்ள மணிகர்ணிகா காட் ஸ்கந்த புராணம் மற்றும் காசி காண்டம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு விஷ்ணு பகவான் இங்கு தியானம் செய்து தனது சக்கரத்தால் மணிகர்ணிகா குண்ட் என்ற கிணற்றைத் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. மேலும், ஒரு மனிதனின் மரணத்தை கொண்டாடும் ஒரே இடம் காசிதான். மேலும் காசியில் தகனம் செய்த உடல் எரிந்து சாம்பலான பிறகு அங்கு 94 என்று எழுதுவார்கள்.
அதற்கு காரணம் ஒரு மனிதனுக்கு 94 குணங்கள் இருப்பதாகவும் அந்த 94 குணங்களும் அவனுடைய செயல்களுக்கு ஏற்ப அதிகரிக்கவும் குறைக்கவும் கூடும் என்று காசியின் பண்டிதர்கள் விளக்குகிறார்கள். அதோடு 94 விடுதலை மந்திரங்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. பிரம்மா ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறு குணங்களை கொடுக்கிறார்.
இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க அவர் நற்பண்புகளை பெற்றவராக இருக்கிறார்கள். எனவே வாரணாசியில் இந்த 94 குணங்களையும் சடலத்திற்கு அர்ப்பணிப்பதன் வழியாக அவர்கள் மோட்சம் மற்றும் முக்தி அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் இறந்தவர்களின் ஆன்மா முக்தியை அடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுவதாக சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







