சிவபெருமானின் அருளை பெற இந்த கஷ்டங்களை கடந்தாக வேண்டும்.. என்ன தெரியுமா?
சிவ வழிபாடு என்பது எப்பொழுதும் அவ்வளவு எளிது அல்ல. சிவ வழிபாட்டில் சிவபெருமானுடைய அருளைப் பெற வேண்டும் என்றால் பல நிலையில் நாம் நம்மை தயார்படுத்தினால் மட்டுமே அது சத்தியம் ஆகும்.
அப்படியாக, சிவபெருமான் உங்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் முதலில் தனித்திருக்க செய்து விடுவார். அது உங்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்ல அதுதான் உங்களை நீங்கள் அறிந்து கொள்ளவும், சிவபெருமானை இன்னும் நெருங்கி அவருடைய அருளை பெறுவதற்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
எப்பொழுதுமே சிவபெருமான் அவருடைய பக்தருக்கு மிகப்பெரிய ஒரு விஷயம் கொடுப்பதற்கு முன்னால் அவர் ஒரு மிகப்பெரிய கடினமான பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அந்த கடினமான பாடம் என்பது கிடைக்கின்ற பெரிய ஆசீர்வாதத்தை அந்த ஆன்மாவானது எந்தஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை பெற வேண்டும் என்பதற்காகவே.

ஆதலால் முதலில் சிவபக்தர்கள் பலரையும் தனித்து விடச் செய்து, தனியாக அவர்களே நீந்தி போராடக்கூடிய ஒரு சூழலையும் ஆற்றலையும் அவர்களுக்கு கொடுக்கிறார். அதேபோல், சிவபெருமான் கைலாச மலையில் யோகநிலையில் மிகவும் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அவருடைய தனிமை அவரை அங்கு பாதிக்கவில்லை.
ஆக, ஒரு மனிதனின் தனிமை தான் பல நேரங்களில் அவனை முழுமையடைய செய்கிறது. தனிமை தான் ஆன்மீகத்தின் தொடக்கம் ஆகும். மேலும், சிவபெருமான் எப்பொழுதும் வெளியே இருக்கக் கூடிய அன்பையும் காதலையும் தேடவில்லை. அவர் அவருக்குள்ளே இருக்கக்கூடிய ஆற்றலை உணர்ந்து அவரை நேசிக்க தொடங்கினார்.
மேலும், சிவனை வழிபாடு செய்ய தொடங்கும் பொழுது நீங்கள் நம்பிய நிறைய நபர்கள் உங்களை விட்டு தூரமாக போக செய்திருப்பார். அதற்காக அவர்களும் நீங்களும் தவறானவர்கள் என்று அல்ல. இதற்குப் பிறகு அவர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் பயணிப்பதற்கான காரணம் இல்லை.
உங்களுடைய பாதையின் வேறு அவர்களுடைய பாதை வேறு என்பதற்காக நீங்கள் பலரையும் பிரிய நேருகிறது. ஆனால் அந்த பிரிவு தான் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு பாடமாக உங்களுடைய ஆன்மீக பாதையில் அமையும்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு பற்றின்மை தொடங்கும் பொழுது தான் அவனுக்கு உணர்வு ரீதியாக ஒரு தெளிவு கிடைக்கும். அப்பொழுதுதான் அவன் மனமானது இன்னும் தெளிவாக அவனுக்கு வேண்டியதை தேடி செல்லும்.
ஆக முதலில் உங்களுடைய பழைய கர்மாக்களை அழித்து உங்களை சுற்றி இருக்கக்கூடியவர்களின் உண்மை முகத்தை உங்களுக்கு காண்பித்து நீங்கள் முழுமையாக தயார் ஆன பிறகு நீங்கள் எதிர்பாராத மிகப்பெரிய விஷயத்தை உங்கள் கைகளுக்கு கொடுத்து பரவசமடைய செய்யக்கூடியவர் சிவபெருமான்.
அவர் நமக்கு மிகத் தெளிவாக துன்பம் தான் ஒரு மனிதனுக்கு இன்பம் தரக் கூடிய ஒரு மிகப்பெரிய பாடம் என்பதை தந்தையாக, ஆசிரியராக, தோழனாக. தாயாக இருந்து கற்று கொடுக்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |