எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மையா?
மனிதனின் மிக பெரிய சொத்து அவனின் எண்ணம்.அந்த எண்ணம் சரியாக இருக்க,அவனை சுற்றி எல்லாம் நன்மையாக அமையும்.இருந்தாலும் சிலர் சொல்வதுண்டு,நான் எப்பொழுதும் நேர்மறையாக தான் சிந்திக்கின்றேன் இருந்தாலும் எனக்கு எதிர்மறையாக நடக்கிறதே என்று வருத்தம் கொள்வார்கள்.
இதனால் தான் ஆன்மீகத்தில் முதலில் "தன்னையறிதல்" மிக அவசியம் என்று சொல்லுவார்கள்.அதாவது சிலர் வெளியில் பேசும் பொழுது மிகவும் தன்னம்பிக்கையாக பேசுவார்கள் ஆனால் ஆழ்மனதில் அவர்கள் நேர்மாறாக மிகவும் பயந்த குணம் கொண்டவர்களாக இருக்கலாம்.
பயம் இயல்பு தான் இருந்தாலும் அதீத அளவில் பயம் கொண்டு எதிர்மறையாக சிந்திக்கும் பொழுது அந்த எண்ணத்திற்கு அதிக சக்திகள் உருவாகிறது.ஆக மனிதன் தான் யார்?என்று அவனை முழுமையாக படிக்க வேண்டும்.செயல்,சிந்தனையை தெளிவு படுத்த வேண்டும்.
இதற்கு தியானம் கைகொடுக்கும்.அதாவது ஓய்வின்றி ஓடும் கால்களுக்கும்,சிந்தனைகளுக்கும் சற்று ஓய்வு கொடுத்து நிதானம் செய்து ஒருநிலைப்படுத்துவதே தியானம். ஒருவர் தன்னை பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்றால் மனதில் அமைதி வேண்டும்.
அந்த அமைதி நாம் ஓர் இடத்தில் அமர்ந்து கண்களை முடி எதையும் யோசிக்காமல் இருக்க பழகும் பொழுது எண்ண அலைகள் நாளடைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும்.அப்பொழுது அவர்களை பற்றி அவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
நிச்சயம் இதற்கு பல நாட்கள் மாதங்கள் எடுக்கும்.ஆனால் இறுதியில் உங்களுக்குள் நல்ல மாற்றம் கிடைக்கும்.ஆக விதி ஒரு புறம் நம் வாழ்க்கையை கூட்டி சென்றாலும்,அதில் பாதி நம்மை அழைத்து செல்வது நம்முடைய எண்ணம் தான்.அந்த எண்ணம் தான் நம்முடைய வாழ்க்கையின் பதில்.
அதை சரியாக வைக்க எல்லாம் சரியாகுவதை பார்க்க முடியும். இங்கு பலரும் அவர்களின் ஆழ்மனதின் குரலை கேட்க தவறுகிறார்கள்.அவர்களை அறியாமலே அவர்கள் ஆழ்மனம் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும்.
அதை கவனிக்க தவறுவதால் பல பிரச்சனைகள் நாம் சந்திக்க நேருகிறது.அந்த குரலை கேளுங்கள் அதை மாற்றுங்கள் எல்லாம் மாறும்.ஆக "எண்ணம் போல் தான் வாழ்க்கை"
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |