எதற்காக நாம் நவகிரகங்களை வழிபாடு செய்யவேண்டும்?
நம் இறைவழிபாட்டில் மிகவும் சாதரணமாக கடந்து செல்லும் ஒரு வழிபாடு தான் இந்த நவரகிரகங்கள். ஆனால் நவகிரகங்களின் முக்கியத்துவம் புரிந்தால் இவ்வாறு செய்யமாட்டோம். அப்படியாக, நவகிரகங்கள் வழிபாடு ஏன் அவசியம்? நவகிரகங்களை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
இந்து மத சாஸ்திரத்தில் ஜோதிடம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதில் நம்முடைய ஜாதகம் இந்த நவகிரகங்கள் வைத்து தான் கணிக்கப்படுகிறது. அதாவது மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நவகிரகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், நவகிரகம் வைத்து தான் மனிதனின் வீழ்ச்சியும், வளர்ச்சியும் மகிழ்ச்சியும் நிர்ணயிக்க படுகிறது. அதாவது பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் வழிநடத்தும் ஆசிரியர் இந்த நவகிரகங்கள் என்றே சொல்லலாம்.
நாம் செய்யும் தவறுக்கும், நன்மைக்கும் பதில் சொல்லும் விதமாக இந்த நவகிரகங்கள் செயல் படுகிறார்கள். ஆக, அவர்களின் தாக்கம் பார்வை நம் மீது அதிகம் பாதிப்பு அடையாமல் இருக்க நிச்சயம் அவர்களின் அருள் தேவை.
அதே போல் நவகிரகங்ள் வழிபாடு செய்ய சில விதிமுறைகள் இருக்கிது. நாம் கோயில்களுக்கு சென்று மற்ற தெய்வங்களை வழிபாடு செய்து இறுதியில் தான் நவகிரகங்களை வழிபாடு செய்யவேண்டும்.
அப்படியாக நவகிரகங்களை சனிக்கிழமை மட்டும் தான் ஒன்பது முறை வலம் வர வேண்டும். மற்ற தினங்களில் வலம் வரும் போது சனி பகவான் தன் சுமைகளை நம் மீது இறக்கி விடுவார். எனவே மற்ற நாட்களில் ஒரே ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. ஆக இவர்களை வணங்கும் பொழுது மிகவும் பயபக்தியோடு வழிபாடு செய்யவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |