அதிரடி முடிவால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பெங்களூரு கோவில்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பெங்களூரில் இருக்கக்கூடிய ஹலசுரு சோமேஸ்வரர் கோவில் நிர்வாகம். அதாவது பெங்களூரில் ஹலசுரு சோமேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது பன்னிரண்டாம் நூற்றாண்டு சோழ காலத்துடன் தொடர்புடைய கோவிலாகும்.
இந்த கோவிலில் விசேஷம் என்னவென்றால் இங்கு நடைபெறக்கூடிய திருமணம் தான். ஆனால் சமீபகாலமாக இந்த கோவிலில் திருமணம் செய்யக்கூடிய தம்பதியினர் பலரும் திருமணம் முடிந்த சிறிது நாட்களிலே விவாகரத்தை நோக்கி சொல்வதாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வுகளை அடுத்து கோவில் நிர்வாகம் இனிமேல் அங்கு திருமணம் நடத்தி வைக்கப்படாது என்ற ஒரு அறிக்கையை தெரிவித்து இருக்கிறார்கள்.

இருப்பினும் இந்த தகவலானது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகம் தெரிவித்திருந்தது என்றாலும் சமீபத்தில் ஒரு பக்தர் கொடுத்த புகாரின் காரணமாக இந்த தகவலானது இப்பொழுது இணையதளத்தில் பரவி மக்களுடைய கவனத்தை பெற்று வருகிறது.
அதன்படி பார்க்கும்பொழுது இந்த கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற திருமணங்களில் பல திருமணங்கள் விவாகரத்தை நோக்கி சென்றிருக்ககும் நேரத்தில் நீதிமன்றத்தில் திருமணத்தை நடத்தி வைத்த அர்ச்சர்களை சாட்சியாக ஆஜராகும் படி அர்ச்சகர்களுக்கு அடிக்கடி சம்மன் அனுப்புவதாக சொல்கிறார்கள்.
ஆதலால் கோவில்களில் அர்ச்சகர்கள் சடங்குகளை அதிக நேரம் செய்வதை காட்டிலும் நீதிமன்றங்களில் இவ்வாறான விஷயங்களில் பங்கு கொள்வது தான் அதிகமாக இருக்கிறது. இது அவர்களை சிரமத்திற்கு ஆளாக்குவதோடு அவர்களை மன உளைச்சலுக்கு தள்ளப்படுவதாக சொல்கிறார்கள்.
மேலும், விவாகரத்து வழக்குகள், குடும்ப பிரச்சினைகள் மற்றும் சட்ட சிக்கல்கள் என அவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்று வருவது என்பது கோவிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் சிலர் வீடுகளை விட்டு பெற்றோர்களுடைய ஒப்பந்தம் இல்லாமல் போலி ஆவணங்களையும் சமர்ப்பித்து திருமணத்தை செய்து கொள்வதால் அவர்களுடைய பெற்றோர்களும் வந்து அடிக்கடி நிர்வாகத்துடன் தேவையில்லாத சர்ச்சை மற்றும் சட்ட சிக்கல்களை உருவாக்குவதாக சொல்கிறார்கள்.
இதுபோன்று விரும்பத்தக்காத சம்பவங்கள் தவிர்க்கவே கோவில் நிர்வாகம் அதிரடியாக ஒரு முடிவு எடுத்து விட்டார்கள். ஆதலால் கோவிலின் புனித தன்மையையும் நற்பெயரையும் காப்பதே அவர்களுடைய முதன்மையான நோக்கம் என்றும் நிர்வாகம் விளக்கியுள்ள நிலையில் இந்த முடிவானது எதிர்காலங்களில் மீண்டும் பரிசீலனை செய்யப்படலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |