சனி பகவானின் கோபம் இவ்வளவு மோசமானதா? என்ன செய்வார் தெரியுமா?
ஜோதிடத்தில் சனி பகவான் கர்ம காரகனாக இருக்கிறார். இவர் ஒரு மனிதன் செய்யக்கூடிய நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வாழ்க்கையில் ஆசிர்வாதமும் பாடங்களையும் வழங்குகிறார்.
ஆனால், சனி பகவான் பொறுத்த வரையில் அவர் நமக்கு நன்மை செய்யும் முன் கட்டாயமாக ஒரு தீமையின் வழியாக ஒரு பாடத்தை கொடுத்து பிறகு நமக்கு மிகச்சிறந்த நன்மையையும் ஒரு எதிர்பாராத ஒரு பரிசையும் அவர் கொடுக்கக்கூடியவராக இருக்கிறார். உதாரணமாக, நம் வாழ்க்கையில் திடீரென்று ஒரு நபரை சந்தித்திருப்போம்.
அவை நட்பு காதல் என்று எதுவாக வேண்டுமாக ஆனாலும் இருக்கட்டும். அவர்களை நாம் மிகவும் நேசிக்க தொடங்கிவிடுவோம். அவர்கள் தான் நம்முடைய உலகம் என்று நாம் சந்தோஷமாக நாட்களை கழித்து கொண்டு இருப்போம். ஆனால், திடீரென்று அந்த உறவில் ஒரு மிகப்பெரிய சிக்கல்களும் ஒரு விரிசலும் உருவாகுவதை நாம் காண முடியும்.

எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று அந்த உறவு உடைந்து போய்விடும். அதைவிட கொடுமையாக, அந்த நபர் நம்மிடம் எந்த ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விலகிப் சென்று இருப்பார். அந்த நேரத்தில் நம் மனம் உடைந்து நொறுங்கிய நிலையில் இருக்கும். மனம் பல கோணங்களில் நிறைய விஷயங்களை யோசித்துக் கொண்டிருக்கும்.
ஆனால் சனி பகவான் இங்கு நமக்கு நன்மையை தான் செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் தொடர்ந்து ஒரு தவறை செய்து கொண்டே இருப்போம். இந்த பிரபஞ்சமானது இந்த தவறை செய்யும் பொழுது அதை திருத்தி கொள்வதற்கான நிறைய வாய்ப்புகள் கொடுத்தாலும் அந்த வாய்ப்புகளை நாம் பார்க்க தவறி மீண்டும் மீண்டும் அந்த தவறுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது இதை சனி பகவான் பார்த்துக்கொண்டே இருப்பார்.
நமக்கு இந்த தவறுகளை மிகச் சரியான நேரத்தில் உணர செய்வதற்கு ஒரு மிகச்சரியான பாடம் அவர் நமக்கு கற்றுக் கொடுப்பார். ஆனால் இதை பலரும் தவறாக புரிந்து கொண்டு, சனி பகவான் மிகவும் மோசமானவர். அவர் கடுமையாக நமக்கு பாடங்களை வழங்கி தண்டனை கொடுப்பவர் என்று எண்ணுவது உண்டு.
மேலும் சனி பகவானுடைய பாடம் என்பது பெரும்பாலான நேரங்களில் உறவுகள் வழியாகத்தான் நமக்கு கற்பித்துக் கொடுக்கிறார். அவை நம்முடைய குடும்பங்களாக இருக்கட்டும் அல்லது ஒரு காதல், திருமண வாழ்க்கை போன்ற இந்த உறவுகளை வைத்து தான் நமக்கு பல உண்மைகளை அவர் மிகத் தெளிவாக கற்றுக் கொடுக்கிறார்.

ஆக, சனிபகவான் நம்முடைய நன்மைய தீமைகளை அறிந்து கொள்வதற்கு ஒரு தவறான நபரை அனுப்பி வைக்கிறார். அந்த தவறான நபர்கள் வழியாக நமக்கு நிறைய உண்மைகளும், நம்முடைய வலிமையும், நாம் செய்த தவறுகளும் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை இன்னும் மிகச் சிறப்பாக வாழக்கூடிய நிலைக்கு அவர் எடுத்துச் செல்கிறார்.
இந்த நேரங்களில் சனி பகவான் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் மிகவும் ஒரு மோசமான நிலையாக கூட இருக்கலாம். ஆனால் அவ்வளவு மோசமான நிலையிலும் அவர் நம்மை கைவிடாமல் நம்மை உயர்த்தி தூக்கிப் பிடித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.
இந்த பிரபஞ்சமானது நமக்கு ஒரு மிகச்சிறந்த பொருளையும் அல்லது பரிசையும் கொடுக்கும் முன் நமக்கு ஒரு கடினமான வாழ்க்கை பாடங்களை கொடுத்து அதன் பிறகு தான் நமக்கு ஒரு மிகப்பெரிய விஷயத்தை கையில் கொடுக்கிறது.

அது நம்முடைய தொழில் வாழ்க்கையில் இருக்கக் கூடிய வெற்றியாக இருக்கட்டும் அல்லது நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சரியான நபராக இருக்கட்டும் இந்த பிரபஞ்சமானது இவ்வாறு தான் இயங்குகிறது.
காரணம் நாம் நம்மை முழுமையாக அறியாமல் நம்மை புரிந்து கொள்ளாமல் சரியான விஷயங்களை சரியாக கையாள முடியாமல் நிற்போம். அதனால் உங்கள் வாழ்க்கையில் சனி திசை காலங்களில் உறவுகளிடையே பிரிவுகள் ஏற்பட்டால் அந்த உறவுகளால் ஏற்பட்ட பிரிவுகளினுடைய வலியை கடந்து சுற்றி உள்ள சூழலை சரியாக கவனித்து உங்களை நீங்கள் மேன்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
அந்தஉறவுகளை நினைத்து வருந்தாமல் அந்த வருத்தத்தை உங்களை வலிமையாக மாற்றக்கூடிய ஒரு சக்தியாக உருவாக்குங்கள். இந்த மாற்றமானது சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். பிறகு அவர் நமக்கு மிகச் சிறந்த அருளை வழங்குவதோடு நமக்கு எது சரியோ? எந்த விஷயங்கள் நம்மை மிகவும் மகிழ்ச்சி படுத்துமோ அதை கட்டாயமாக நமக்கு வழங்குவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |