வீடுகளில் ஆமை சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

By Sakthi Raj Mar 05, 2026 11:48 AM GMT
Report

வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் பலரும் வீடுகளில் மிகப்பெரிய அளவில் பிரச்சினையை சந்தித்த பிறகு தான் வாஸ்துவை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்பின்பு வாஸ்து தொடர்பான சில விஷயங்களை வீட்டில் மாற்றி அமைக்கவும் முயல்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் வீடுகளில் வாஸ்து அமைப்பின்படி ஆமை சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

நாம் பலருடைய வீடுகளிலும் கடைகளிலும், ஆமை சிலை இருப்பதை பார்க்க முடியும். ஆமை வாஸ்து சின்னமாக மட்டுமல்லாமல் விஷ்ணு பகவானின் கூர்மை அவதாரத்துடனும் தொடர்புடையதாக இருக்கிறது.

வீடுகளில் ஆமை சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை | Why Should We Keep Turtle At Home According Vastu

2026 நாளை நடக்கும் சனி பெயர்ச்சி.. இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்

2026 நாளை நடக்கும் சனி பெயர்ச்சி.. இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்

அதனால், ஆமை சிலையை வெறும் அலங்கார பொருட்களாக மட்டுமல்லாமல் அதில் புதைந்து இருக்கக்கூடிய அறிவியலையும் ஜோதிட தகவல்களையும் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், வாஸ்து ரீதியாக முழு நிலவு நாளில் தான் நம் ஆமை சிலையை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆமை சிலை வீட்டிற்கு வந்த பிறகு அதை சிறிது நேரம் பச்சை பாலில் வைக்க வேண்டும். பின்னர் மிகவும் புனித நேரமான "அபிஜித் முஹுர்த்த" நேரத்தில் பாலில் இருந்து எடுத்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

ஆமை ஒரு நீர் வாழ் விலங்கு என்பதால் அதை எப்போதும் தண்ணீர் நிரப்பப்பட்ட கிண்ணத்தில் தான் வைக்க வேண்டும். அந்த தண்ணீர் கிண்ணத்தை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது ​​'ஓம் ஸ்ரீ கூர்மய் நமஹ' என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

வீடுகளில் ஆமை சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை | Why Should We Keep Turtle At Home According Vastu

அருணகிரிநாதர் வரலாறு: திருப்புகழ் பாடியவர் ஒரு காலத்தில் இவ்வளவு மோசமானவரா?

அருணகிரிநாதர் வரலாறு: திருப்புகழ் பாடியவர் ஒரு காலத்தில் இவ்வளவு மோசமானவரா?

அதேபோல் ஆமையின் முகம் எப்பொழுதும் வீட்டின் பிரதான கதவின் திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். அப்பொழுது தான் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையும். அதோடு கிண்ணத்தில் இருக்கக்கூடிய தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்றலாம்.

வீடுகளில் செம்பு உலோகத்தில் இருக்கக்கூடிய ஆமையை வைக்கும் பொழுது நம் வீட்டில் உள்ளவர்களுடைய உடல் நல பிரச்சனைகள் விலகி குழந்தைகள் படிப்பு தேர்ச்சி அடைகிறார்கள். பித்தளையில் ஆமை சிலை வைக்கும் பொழுது பதவி உயர்வு புகழ் மற்றும் பொருளாதார ஏற்றம் கிடைக்கிறது.

படிக ஆமை வைக்கும் பொழுது வாஸ்து குறைபாடுகள் நீங்கி மன அழுத்தம் நீங்குகிறது. திருமணம் முடிந்து நீண்ட நாட்கள் குழந்தை இல்லை என்று வருந்துபவர்கள் பெரிய ஆமையின் முதுகில் சிறிய ஆமை இருக்கும் சிலையை வீடுகளில் வைக்கும் பொழுது விரைவில் குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆதலால் சாஸ்திரப்படி சரியான முறைப்படி ஆமை சிலையை நாம் வீட்டில் வைக்கும் பொழுது மன மகிழ்ச்சியும் செல்வமும் நம்மை வந்து சேருகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US